பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. லிட். பட்டம் பெற்றது 183

இந்தப் பிள்ளையாண்டான் இருக்கிருன். இவனுக்கு நன்ருக சப்ரூப்’ திருத்தத் தெரியும். கட்டுரையும் எழுதுவான்' என்று என்னைக் காட்டினர். ஆசிரியப் பெருமானது வார்த்தையில் மதிப்பு வைத்துக் கலைமகளுக்குத் துணையாசிரியராக அப்போது என்னைச் (சேர்த்துக் கொண்டார்கள். இறைவன் திருவருளால் மூன்று ஆண்டுகளுக்குப் பின் நானே அதன் ஆசிரியர் ஆனேன். இதுவரையில் இறைவன் திருவருளால் அந்தப் பணியை ஆற்றி வருகிறேன்.

கலைமகளில் சில தமிழ் நூல்களை வெளியிட்டு வரலாம் என்ற எண்ணம் ஆசிரியப் பெருமானுக்கு உண்டாயிற்று. அப்படியே சில தனி நூல்களே அதன் மூலம் வெளிவரச் செய்தார்கள்.

கலைமகளில் வெளியான முதல் கட்டுரைக்குப் பிறகு சில மாதங்கள் ஆசிரியருடைய கட்டுரை எதுவும் அதில் வெளிவரவில்லை. அன்பர்கள் எல்லாரும் வற்புறுத்தவே தம்முடைய அனுபவங்களையும் புலவர்களின் வரலாறுகளையும் ஒவ்வொரு மாதமும் மீண்டும் எழுதத் தொடங்கினர். இதனல் கலைமகளின் பெருமை மிகவும் உயர்ந்தது. ஆசிரியப்பெருமான் அறிந்த வரலாறுகளேயும், அவருடைய அனுபவங்களேயும் தமிழ்நாடு அறிந்துகொள்ளக் கலைமகள் ஒரு கருவியாக விளங்கியது. ஆசிரியப்பெருமான் உரை நடையில் பல நூல்களே வெளியிட்டிருக்கிருர்கள். அதற்கு உறு துணையாகக் கலைமகள் ஒரு கருவியாக இருந்தது.

திருப்பனந்தாள் காசி மடத்தார் வித்துவான் பரீட்சையில் முதல் வராகத் தேர்ச்சி பெற்றவருடைய பரிசளிப்பு விழாவுக்கு ஆசிரியப் பெருமான் திருச்சிக்குச் சென்றிருந்தார். அங்கே விழா நடந்த பிறகு தாம் இளமையில் பழகிய இடங்களைப் பார்த்து வர வேண்டு மென்று எண்ணி அரியிலுரர் சென்ருர். ஆசிரியப்பிரானது இளமைப் பருவத்தில் அவருடைய தந்தையார் அங்கேதான் வாழ்ந்து வந்தார். அந்த ஊர்க் கோவிலில் தசாவதார மண்டபம் உண்டு. அங்கே திருமாலின் பத்து அவதார வடிவங்களும் துரண்களில் உள்ளன. அவற்றினிடையே ஒளிந்து விளையாடிப் பொழுது போக்குவது சிறிய பிள்ளையாக இருந்தபோது ஆசிரியப்பெருமானது வழக்கம். உடன் வந்த நண்பர்களுக்கு அங்குள்ள இடங்களே எல்லாம் காட்டினர். அங்கே போய் அவற்றையெல்லாம் கண்டு நண்பர்களுக்குக் காட்டும் போது ஆசிரியப்பெருமானுக்கு மீண்டும் இளமை வந்தது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று.

சடகோபையங்கார் மனைவியார்

ஆசிரியப்பெருமானுக்கு அவரது இளம்பருவத்தில் தமிழ் கற்பித்த சடகோபையங்கார் அரியிலுரரில்தான் இருந்தார். அவர்