பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 என் ஆசிரியப்பிரான்

இருந்த காலம் வரையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் அவருக்குப் பொருள் அனுப்பி வருவார். நாங்கள் அரியிலுரர் சென்றபோது அந்தப் பெரியாருடைய மனேவியார் மிகவும் முதுமை அடைந்த நிலையில் இருந்தார். அவரைக் கண்டவுடன் ஆசிரியப் பிரான் தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர். ஆசிரியப்பெருமான் தம் கையில் இருந்த பொருள்களை அந்த மூதாட்டியிடம் கொடுத்துத் தம்மை ஆசீர்வாதம் செய்யும்படி வேண்டினர். முதியவராகிய ஆசிரியர் அவ்வாறு செய்ததைக் கண்டு எல்லோரும் வியப்படைந்தார்கள்.

பிற பிரபந்தங்கள்

1982-ஆம் ஆண்டு செந்தமிழ்ப் பத்திரிகையில் கடம்பர் கோவில் உலா, பழனிப் பிள்ளைத்தமிழ், மதுரைச் சொக்கநாதர் மும்மணிக்கோவை ஆகிய நூல்கள் அனுபந்தமாக வெளியாயின.

1933-ஆம் ఈ యేడా சிவநேசன்' பத்திரிகையில் சங்கரலிங்க உலாவும், திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பாவும் வெளியாயின. உரிய குறிப்புக்களுடனும் முகவுரையுடனும் அவற்றை வெளியிட் L-Tr.

தமிழ் அன்பர் மகாநாடு

அக்காலத்தில் சென்னைச் சிண்டிகேட் உறுப்பினராக இருந்த கே. வி. கிருஷ்ணசாமி ஐயர் தமிழ் அன்பர்கள் மகாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். எந்தக் காரியத்தையும் முறை யாகவும், திறமையாகவும் செய்யும் ஆற்றல் பெற்ற அவர் அந்த மகாநாட்டைப் பெரிய அளவில் நடத்த வேண்டுமென்று பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். அந்த மாநாட்டுக்குப் பிறகு நிலையாகவே ஒரு தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழ்ப் பணிகளைச் செய்து வர ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது அவர் எண்ணம். மகாநாட்டில் வரவேற்புக் குழுவிற்குத் தலைவராக ஆசிரியப் பெருமானையே இருக்கச் செய்தார். தமிழன்பர்களின் மகாநாட்டின் சார்பாக ஒரு புத்தகக் கண்காட்சி நடந்தது. அந்தக் கண்காட்சியை மகாகனம் சீநிவாச சாஸ்திரியார் தலைமையில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பூரீசண்முக இராஜேசுவர சேதுபதி திறந்து வைத்தார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் அந்த விழா நடந்தது. அப்போது பச்சையப்பன் கல்லூரி சென்னை ஜார்ஜ் டவுனில் இருந்தது. அந்த மகாநாடு 1933-ஆம் வருஷம் டிசம்பர் 23-ஆம் தேதி காலையில் ஆரம்பமாகியது. மகாநாட்டுக்கு அப்போது கல்வி மந்திரியாக இருந்த திரு குமாரசுவாமி ரெட்டியார் தலைமை