பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. லிட். பட்டம் பெற்றது. 185

தாங்கினர். வரவேற்புக் சொற்பொழிவை ஆசிரியப்பெருமான் திகழ்த்தினர். -

முதல்நாள் மகாநாடு நன்முக நடந்தது. மறுநாள் சுய மரியாதைக்காரர்கள் சிலர் வந்து குழப்பம் விளைவித்தார்கள். இதனால் பலருக்கு வெறுப்பு உண்டாயிற்று. அதனல் தமிழன்பர்கள் மகாநாடு நிறைவேறிய பிறகு தமிழ் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைக்க, கே. வி. கிருஷ்ணசாமி ஐயர் எண்ணியிருந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டார். பலர் சேர்ந்து செய்கிற நல்ல காரியங்களைக் கூடப் பாராட்டாமல் இப்படித் தடை விளைவிக் கிருர்களே என்று அவர் மனம் வருந்தியது. மிகவும் ஊக்கத்தோடு இருந்த அவருக்கு இனி எதுவும் செய்து பயனில்லை என்ற எண்ணம் உண்டாயிற்று. அதல்ை வேறு முயற்சி எதுவும் செய்யவில்லை.

பிள்ளையவர்களின் சரித்திர வெளியீடு

1933-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீளுட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரத்தின் முதல்பாகம் வெளியாயிற்று. அதைப் படித்த அன்பர்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருப்ப தாகப் பாராட்டினர்கள். இரண்டாவது பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதினர்கள். வேதாரண்யத்திலிருந்து வி. வி ரமண சாஸ்திரி என்னும் அறிஞர், 'பிள்ளையவர்களின் சரித்திரம் முதல் பாகத்தை முழுதும் படித்தேன். கையில் எடுத்த பிறகு ஆதியோடந்தமாகப் பாராமல் கீழே வைக்க என்னல் முடியவில்லை. தங்கள் வசன நடையின் இனிமையும், தெளிவும் என்னை மெய்ம்மறக்கச் செய்தன. தாசில் சிவகுருப்பிள்ளைக்கும், பிள்ளையவர்களுக்கும் நடந்த உரையாடலைப் பற்றி என் தகப்பனர் சொல்லியதுண்டு. யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் பதிப்பித்த நூல்கள் சிலவற்றிற்குப் பிள்ளையவர்கள் சிறப்புப் பாயிரம் எழுதி அனுப்பிய விவரங்களேத் தாமோதரம் பிள்ளையவர்கள் சொல்லியதாகச் சேஷையா சாஸ்திரிகள் என்னிடம் தெரிவித்திருக்கிருர்கள். இரண்டாவது பாகம் வெளி வந்தவுடன் எனக்கு அவசியம் அனுப்ப வேண்டுகிறேன்' என்று எழுதினர்.

மீனட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரத்தில் ஒரிடத்தில் அவர் கோபம் கொண்டு சில காலம் தம்முடன் பேசாமல் இருந்தார் என்று எழுதியிருக்கிருர். யாரோ ஒருவருடைய கோளில்ை ஒரு தினம் இவர் என்மீது கோபம் கொண்டு என்னுடன் பேசாமல் இருந்து