பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 86 என் ஆசிரியப்பிாான்

விட்டார். யார் மீது கோபம் வந்தாலும் சில தினம் அவரோடு பேசாமலே இருந்து விடுவது இவர் இயல்பு; எந்தச் சமயத்தும் யாரையும் கடிந்து பேசுவதே இல்லை. இவ்வாறு எழுதிப் பிறகு அந்தக் கோபம் ஆறிய நிகழ்ச்சியையும் எழுதி உள்ளார். 疹

"μπαστ ஒருவருடைய கோளினல்’ என்று தம் ஆசிரியருக்கு உண்டான காரணத்தைக் குறிப்பிட்டிருக்கிருர். அந்தக் காரணம் இதுதான்.

ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பூர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் ஆசிரியப்பிரானிடம், காயத்திரி மந்திரம் என்பது என்ன? அதைச் சொல்' என்று அவர் கேட்டார். மறைவாக அவர் ஜபிக்க வேண்டிய அந்த மந்திரத்தை வெளிப் படையாகச் சொல்லக் கூடாதென்று எண்ணி அதை ஆசிரியர் சொல்லவில்லை. அவர் சொல்லாததை யாரோ மீனட்சிசுந்தரம் பிள்ளையிடம் சொல்லி, சந்நிதானம் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் அலட்சியப் படுத்தி விட்டார் என்று சொல்லியிருக் கிருர். அதனுல்தான் பிள்ளையவர்களுக்குக் கோபம் உண்டாயிற்று.

1934-ஆம் ஆண்டு வித்துவான் பரீட்சையில் முதல்வராகச் தேர்ச்சி பெற்றவருக்குப் பரிசு வழங்குவதற்காக ஆசிரியர் கோவை சென்ற போது அந்த நகரசபையினர் ஆசிரியருக்கு ஒரு வரவேற்பு அளித்துப் பாராட்டினர். ஒரு தமிழ்ப்புலவருக்கு இத்தகைய மரியாதை செய்வது அரிய செயல். ஐயரவர்கள் இதற்கு எல்லா வகையிலும் தகுதி உள்ளவர் என்று பலரும் பாரட்டினர்.

அதன் பிறகு ஆசிரியப்பெருமான் சென்னை வந்து சேர்ந்தார். கோவை நகரசபையில் இப்படி ஒரு வரவேற்பு அளித்தது தவறு என்று சிலர் பின்னல் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். அது பற்றி ஒர் அன்பரிடமிருந்து ஆசிரியருக்கு ஒரு கடிதம் வந்தது. பொருமை. யுடையவர்களுக்கு எந்த நல்ல காரியமும் வெறுப்பை அளிக்கும் என்பது உண்மையாயிற்று.

ஆசிரியப் பெருமான் சஷ்டியப்த பூர்த்தியைச் சிறப்பாக நடத்திக் கொள்ளவில்லை. காளஹஸ்தி போய் வந்தார்கள் என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கு 80-ஆவது வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அதை மிகச் சிறப்பாக நடத்த வேண்டுமென்று கே. வி. கிருஷ்ணசாமி ஐயர் நினைத்தார். ஆசிரி யரிடமே எதுவும் தெரிவிக்காமல் திரு பெ. நா. அப்புசாமி ஐயர்

பூர் மீட்ைசிசுந்தரம் பிள்ளை சரித்திரம், 3-ஆம் பாகம், ப. 98.