பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. லிட். பட்டம் பெற்றது 187.

முதலிய சில அன்பர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துக் கொண்டார்.

ஆசிரியப்பெருமான் 64 வயது வரை கல்லூயில் வேலை பார்த். தார்கள். வேறு யாரும் அதுவரை அவ்வாறு தொடர்ந்து வேலை பார்க்க அனுமதிக்கப் பெறவில்லை.

ஆயிரரூபாய்

குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் அச்சிட்டு முடிந்த பிறகு, திருப்பனந்தாள் குருபூஜைக்குச் சென்ற காலத்தில் அப்பொழுது மடாதிபதியாக இருந்த திரு சாமிநாதத்தம் பிரான் ஆசிரியப்பிரான் இருக்கும் இடம் வந்து ஆயிரரூபாய் கொடுத்ததை முன்பு எழுதி யிருக்கிறேன்.

அதன் பின்பு என்னை ஒருமுறை திருப்பனந்தாளுக்கு அனுப்பும் படி ஆசிரியப்பிரானுக்கு தம்பிரான் எழுதினர். நான் அப்படியே போனேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஆயிரம் ரூபாயை வருவித்து எனக்கு வழங்கினர்; அப்போது, குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்தை ஐயரவர்கள் பதிப்பிப்பதற்கு நீ மிகவும் துணையாக இருந்திருக்கிருய், உனக்கு ஏதாவது சம்மானம் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். இதை வாங்கிக் கொள். ஆனல் ஒரு விஷயம் சொல்கிறேன். இதை நான் கொடுத்த விஷயத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம். ஐயரவர்களுக்குக்கூடத் தெரிவிக்க வேண்டாம் என்ருர், ஐயரவர்களுக்குக்கூட தெரிவிக்க வேண்டாம் என்று அவர் சொன்னதைக் கேட்டவுடன் என் நெஞ்சம் துணுக்குற்றது. 'என்னை ஆட்கொண்ட தெய்வமாகிய அவர் களுக்குத் தெரிவிக்காமல் எப்படி இருப்பது?’ என்றேன் நான்.

"நான் சொன்னதற்குக் காரணம் உண்டு. இந்த செய்தி ஐயரவர்களுக்குத் தெரிந்தால் அவர் அதை மகிழ்ச்சியோடு தம் குமாரரிடம் சொல்வார். உனக்குக் கிடைக்கும் நன்மையில்ை அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகும் என்பது எனக்குத் தெரியும். ஆனல் அந்தச் செய்தியை ஐயரவர்கள் குமரர் மற்றவர். களுக்குந் தெரிவிப்பார். உன்னுடன் ஐயரவர்களிடம் பாடம் கேட்கும் மாளுக்கர்களுக்கு உன்மேல் பொருமை உண்டாகும். அதனுல்தான் அப்படிச் சொன்னேன்' என்ருர், அதன்பிறகு வற்புறுத்தவில்லை. நான் ஆயிரரூபாய் பெற்றதை ஆசிரியப் பிரானிடம் சொன்னபோது அவருக்குண்டான மகிழ்ச்சிக்கு அளவே. இல்லை. தம்மைச் சார்ந்தவர்களுக்கு நன்மை உண்டானல் தமக்கே உண்டானது போல மகிழும் அரிய பண்புடையவர் ஆசிரியர்.