பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 என் ஆசிரியப்பிரான்

உடனே ஆசிரியர், மகாராஜா அவர்களுடைய எல்லையற்ற அன்பை நான் இதல்ை உணர்ந்து கொள்கிறேன். அவர்களே இக் காலத்துக் கர்ணன் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய கருத்தை நான் அவர்களிடமே நேரில் சொல்கிறேன்' என்று சொன்னர்.

அப்படியே மறுநாள் காலையில் ஆசிரியர் பாஸ்கர சேதுபதி மன்னரைப் பார்க்க அரண்மனை சென்ருர். தம் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு, தமக்கு நன்றி தெரிவிக்கத்தான் வந்திருக்கிருர் என்று முதலில் மன்னர் எண்ணினர். ஆகவே மகிழ்ச்சியோடு ஆசிரியரை வரவேற்ருர்.

மன்னரோடு ஆசிரியர் பேசத் தொடங்கினர். முதலில் எடுத்தவுடன் அதனைச் சொல்லவில்லை. சிறிது நேரம் வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, முடிவில் அது பற்றிச் சொன்னர்.

'மகாராஜா அவர்கள் சாமி மூலம் (பாண்டித்துரை தேவர்) சொல்லி அனுப்பிய செய்தியை அவர்கள் தெரிவித்தார்கள். அதிலிருந்து மகாராஜா அவர்களுக்கு என்னிடத்தில் எத்தனை அன்பு இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன். எவ்வளவோ உபகாரங்களைத் தங்களிடமிருந்து நான் பெற்றிருக்கிறேன். எனக்கு இப்போது எதிலும் குறைவு இல்லை. ஆண்டவன் திருவருளினல் கல்லூரியில் எனக்குச் சம்பளம் வருகிறது. எனக்கு அவ்வளவு பெரிய குடும்பமும் இல்லை. இருப்பதை வைத்துக்கொண்டு செட் டாக வாழத் தெரிந்தவன் நான். தாங்கள் வழங்குவதை ஏற்க மறுக்கிறேன் என்று எண்ணக் கூடாது. சம்ஸ்தானத்தின் நிலைமை எப்படி இருக்கிறது என்று எனக்கு நன்ருகத் தெரியும். இந்த நிலையில் நான் இப்போது அவ்வளவு பெரிய கொடையைத் தங்களிட மிருந்து ஏற்ருல் அது என் மனத்திற்குச் சம்மதம் ஆகாது' என்று சொன்னர்.

அப்போது இராமநாதபுரம் சம்ஸ்தானம் பல விதமான கடன் தொல்லைகளுக்கு ஆளாகியிருந்த நேரம். அதை எண்ணி ஆசிரியர் அவ்வாறு சொன்னர்,

ஆசிரியரது கருத்தை உணர்ந்துகொண்டு ஒரு பதிலும் சொல் லாமல் சிறிது நேரம் மெளனமாக இருந்தார் சேதுபதி மன்னர். பிறகு, 'தங்கள் விருப்பம். ஆனல் மேலும் கடனளியாக என்னைத் தாங்கள் ஆக்கிவிட்டது போன்ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்படு கிறது' என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பினர்.