பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 என் ஆசிரியப்பிரான்

என் திருமணம்

நான் ஆசிரியப் பிரானிடம் வந்து சேர்ந்த போது எனக்குத் திருமணம் ஆகவில்லை. அக்காலத்தில் சுதேசமித்திரனில் நிருபராக இருந்த விசுவநாதையர் என்பவர் தம் பெண்ணே எனக்குக் கொடுக்கலாம் என்று எண்ணினர். அதை ஆசிரியப்பிரானிடம் தெரிவித்தார். பெண்ணைப் பார்ப்பதற்காக நானும் ஆசிரியர் குமாரராகிய கல்யாண சுந்தரையரும் போனேம். பெண்ணைப் பார்த்தோம். எனக்கு அந்தப் பெண்ணேப் பிடிக்கவில்லை. ஆளுல் என் கருத்தை வெளியிடாமல். முருகன் விட்ட வழி விடட்டும் என்று எண்ணிச் சரி என்று சொல்லி விட்டேன்.

அதன் பின்பு மறுநாள் ஆசிரியர் வீட்டுக்கு வருவதாக சொன்ன விசுவநாதையர் வரவில்லை. ஒரு மாத காலத்துக்கு மேல் வரவில்லை. பல காலம் கழித்து விசுவநாதையர் என்னைச் சந்தித்தபோது சொன்னர் : 'நான் மறுநாள் வருவதாகச் சொன்னபடி வரவில்லை. அந்தப் பெண் சரியான மூளை வளர்ச்சியில்லாதவள். உனக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்தால் உன் வாழ்வு வீணுகிவிடுமே என்று பிறகு தோன்றியது. இரவெல்லாம் நானும் என் மனைவியும் தூங்காமல் இதைச் செய்யக் கூடாது; தவறு என்று பேசிக் கொண்டோம். அதனுல்தான் வரவில்லை’ என்று சொன்னர். முருகன் திருவருட் செயல் இது என்று எண்ணி வாழ்த்தினேன்.

மயிலாப்பூரில் ஆசிரியப் பெருமானுக்கு வேண்டியவராக இராமசாமி ஐயர் என்பவர் இருந்தார். அவருடைய சகோதரி மகளாகிய அலமேலு என்பவள் அவரோடு இருந்தாள். அந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று அவர் நினைத்தார். ஒருநாள் என்ன அழைத்துக் கொண்டு ஆசிரியப்பிரான் அவர் வீட்டுக்குப் போனர். அந்தப் பெண் வந்து எங்களை வணங்கிள்ை. ஆசிரியருக்குப் பிரியமான கோபால கிருஷ்ண பாரதியாரின் பாடல் ஒன்றைப் பாடினள். எனக்கு அந்தப் பெண்ணேப் பிடித்தது. ஆகவே என் சம்மதத்தைத் தெரிவித்தேன். ஆசிரியப் பெருமானுடன் சென்றதல்ை நல்ல பெண் கிடைத்தாள் என்று நான் எண்ணினேன். பிறகு அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் திருமணம் ஆயிற்று. ஆசிரியப்பிரான் உடனிருந்து நடத்தி வைத்து ஆசி கூறினர்.

வேலையை நான் மறுத்தது

அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக மகாகணம் பூரீநிவாச சாஸ்திரிகள் இருந்தார். அவர் விடுப்பில் இருந்த