பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. லிட். பட்டம் பெற்றது 189,

பொழுது அவர் பணியை டி. ஆர். வேங்கடராம சாஸ்திரிகள் பார்த்து வந்தார். அவர் கோடைகானலுக்குப் போயிருந்தார்.

அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக இருந்த சேது சம்ஸ்தான மகா வித்துவான் ரா. ராகவையங்கார் அந்த வேலையிலிருந்து ஓய்வு பெற இருந்தார். அவருடைய இடத்தில் தக்க புலவர் ஒருவரை நியமிக்க வேண்டு மென்று வேங்கடராம சாஸ்திரியார் நினைத்தார். தம் கருத்தைச் சென்னையில் இருந்த கே. வி. கிருஷ்ணசாமி ஐயருக்கு, யாரேனும் ஒரு நல்ல புலவரைப் பரிந்துரை செய்ய வேண்டுமென்று எழுதினர்.

கே. வி. கிருஷ்ணசாமி ஐயர் என்னை அந்த வேலைக்கு நியமிக்க லாம் என்ற கருத்துடன் அதை ஆசிரியப் பிரானுக்குத் தெரிவித்தார். ஆசிரியருக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியும் ஒரு விதத்தில் துன்பமும் உண்டாயிற்று. எனக்கு நல்ல வேலை கிடைப்பதில் மகிழ்ச்சி, ஆளுல் என்னைப் பிரிவதில் வருத்தம்.

எனக்கு அந்த வேலையில் சிறிதும் நாட்டம் இல்லை. ஆசிரியப் பிரானப் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். என் கருத்தைத் தெரிந்து கொண்ட ஆசிரியர் என்னை அழைத்துக் கொண்டு கே. வி. கிருஷ்ணசாமி ஐயரிடம் சென்ருர். அவரோடு பேசத் தொடங்கினர். . .

தாங்கள் இவனிடத்தில் இவ்வளவு அபிமானம் வைத் திருப்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ராக வையங்கார் பார்த்த வேலையை இவன் நன்ருகப் பார்ப்பான். ஆராய்ச்சி செய்வதில் நல்ல தேர்ச்சி உள்ளவன். என்னுடைய -பதிப்பு வேலைகளில் இவன் உடனிருந்து பல வேலைகளைச் செய்து என் சிரமத்தைக் குறைத்து வருகிருன். இவனுடைய உதவியால் என்னு டைய வேலை நன்ருக நடைபெறுகிறது. அத்தகைய ஆராய்ச்சி வேலையை அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் சிறப்பாக செய்து நல்ல பேர் பெறுவான் என்பதில் சந்தேகம் இல்லை. எனக்கும் ஒரு வேலை அங்கே போட்டுத்தரச் சொல்லுங்கள். நானும் இவனுடன் இருப்பேன்’ என்ருர்.

இதைக் கேட்டபோது கே. வி. கிருஷ்ணசாமி ஐயர் சிரித்துக் கொண்டார். என்னைப் பிரிவதற்கு ஆசிரியப்பிரானுக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு, மேலே வற்புறுத்தவில்லை.

80-ஆம் ஆண்டு நிறைவு விழா

ஆசிரியப்பெருமானது 80-ஆம் ஆண்டு நிறைவு விழா மிகச் சிறபாகப் பல்கலைக் கழக மண்டபத்தில் நடைபெற்றது.