பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 90 என் ஆசிரியப்பிரான்

லர் முகம்மது உஸ்மான் தலைமை தாங்கினர். பல பல நிறுவனங் களைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு வாசித்தளித்தார்கள். சென்னையில் இருந்த பல பெரிய மனிதர்கள் அதில் கலந்து கொண்டார்கள். ஆசிரியப்பெருமானின் திருவுருவப் படம் ஒன்றை அப்போது பல்கலைக் கழக மண்டபத்தில் திறந்து வைத்தார்கள். -

அந்தச் சமயத்தில் சென்னையில் மாத்திரமன்றித் தமிழ் நாட்டில் பலவிடங்களில் சதாபிஷேக விழாவை மக்கள் நடத்தினர்கள், இலங்கை, பர்மா ஆகிய இடங்களில் கூடத் தமிழ் அன்பர்கள் சேர்ந்து இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்கள்.

1934-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீளுட்சி சுந்தரம் பிள்ளை யவர்கள் சரித்திரத்தின் இரண்டாவது பாகம் வெளிவந்தது. அந்தப் பாகத்தில் பிள்ளையவர்களிடம் ஆசிரியப்பெருமான் அவர்கள் பாடம் கேட்கத் தொடங்கியது முதல் பிள்ளையவர்களின் இறுதிக் காலம் வரையிலும் உள்ள நிகழ்ச்சிகள் இருந்தன.

கரந்தை விழாத் தலைமை

கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த திரு டி. வி. உமாமகேசுவரம் பிள்ளை அந்தச் சங்கத்தின் ஆண்டு விழாவுக்கு வர வேண்டுமென்று ஆசிரியப்பிரானுக்கு எழுதினர்கள். தலைமை வகிக்க வரவேண்டுமென்று மாத்திரம் கேட்டால் வர இசைவு தர மாட்டார்களோ என்று நினைந்து, இதனேடு சேர்த்துப் பிள்ளை யவர்களின் விழாவையும் நடத்தலாம் என்று எண்ணியிருக்கிருேம் என எழுதினர். அதைக் கண்டு ஆசிரியப்பெருமான் ஒப்புக் கொண்டார். - . .

1934-ஆம் வருஷம் மார்ச் 17, 18 தேதிகளில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் 23-ஆம் ஆண்டு விழாவுடன் பிள்ளையவர்கள் திருநாளும் சேர்ந்து நடைபெற்றது. ஆசிரியப் பெருமான் தலைமை தாங்கினர். பெரும்புலவர்கள் பலர் பேசினர்கள். இரண்டாவது நாளைப் பிள்ளையவர்கள் திருநாளாகக் கொண்டாடினர்கள். அதில் என்னையும் பேசும்படி ஆசிரியர் பணித்தார்.

வளையாபதி

1934-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் தனித் தமிழ் வித்துவான் பரீட்சையில் முதல்வராகத் .ே த ர் ச் சி பெற்றவருக்குத் திருப்பனந்தாள் ஆயிரம் ரூபாய் பரிசளிப்பு விழா கோயம்புத்தூரில் நடந்தது. அந்த ஆண்டு திரு ஏ. எஸ். நாராயணசாமி நாயுடு