பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. லிட். பட்டம் பெற்றது 191

அந்தப் பரிசைப் பெற்ருர். ஆசிரியப்பிரான் அந்த விழாவுக் காகக் கோயம்புத்துனர் சென்றிருந்தார். அந்த ஊரில் வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்த டி. ஏ. ராமலிங்க செட்டியார் ஆசிரியப் பெருமானிடத்தில் ஈடுபட்டு அந்த விழாவுக்கு வேண்டிய இாரியங்களைச் செய்தார். அந்த விழா முடிந்த பிறகு ஆசிரியர் பழைய கோட்டைக்கு வந்தார்கள். அந்தப் பக்கங்களில் ஏடு தேட வேண்டுமென்ற ஆசை இருந்தது. நான் சென்னையிலிருந்து சென்று பழையகோட்டையிலிருந்த ஆசிரியருடன் சேர்ந்து கொண்டேன். அப்போது யாரோ ஒரு கவிராயரிடத்தில் வளையாபதி ஏட்டுச்சுவடி இருப்பதாகச் சொன்னர்கள். அங்கே போய்ப் பார்த்தபோது முன் ஒரு முறை அங்கே சென்று ஒரு பயனும் இல்லாமல் திரும்பியது நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன்.

ஆசிரியப்பெருமான் பிற்காலத்தில் உரைநடையில் பல அரிய கட்டுரைகளை எழுதி வந்தார். தம்முடைய அனுபவங்கள், புலவர் களின் வாழ்க்கை ஆகியவற்றைச் சுவையான பகுதிகளாகத் தனித் தனியே அமைத்து எழுதினர். கலைமகளில் மாதந்தோறும் அவரது கட்டுரை வெளியாயிற்று. மற்றப் பத்திரிகைகளின் ஆண்டு மலர்கள் வெளிவரும்போது அந்த மலர்களில் எல்லாம் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் முதுமை நிலையில் இருந்த ஆசிரியப் பெருமானது அநுபவசாரமாக விளங்கின. அவற்றைப் பார்த்த தமிழ் மக்கள் மிகவும் இன்பத்தை அடைந்தார்கள். மிகப் பழைய நூல்களை எல்லாம் எடுத்துத் தமிழ்நாட்டிற்கு வழங்கிய பெருமான் இப்போது விரிவான உரைநடையில் எழுதுவதைக் கண்டு, அவர் களுடைய வாழ்க்கை வரலாற்றையும் எழுத வேண்டுமென்று விண்ணப்பித்துக் கொண்டார்கள். சாதி, சமயம், குலம் கடத்த நிலையில் ஆசிரியப்பெருமானிடம் அன்பு வைத்துப் பாராட்டிய வர்கள் பலர். திரு ஒய். ஜி. பானேல் என்பவர் பின்வருமாறு ஒரு கடிதம் எழுதினர். -

"கல்வி விஷயத்தில் தாங்கள் இந்துக்கள், கிறிஸ்துவர்கள் என்கிற பேதம் பார்க்கிறவர்கள் அல்லவென்பது அதில் தாங்கள் சவேரிநாதபிள்லை, வேதநாயகம் பிள்ளே என்போரைப் பற்றி எழுதி யிருப்பதல்ை தோன்றுகிறது. மேலும் தாங்கள் செப்டம்பர் மாதம் நாலாம் தேதி சென்னை வாலிபர் சங்கக் கட்டிடத்தில் கனம் சற்குணர் நாடார் விஷயத்தில் செய்த உபந்நியாசத்தால் சாதிபேதம், மத பேதம் பார்க்கிறவர்கள் அல்லவென்பதைக் கண்டுகொண்டேன்.

"நான் 1959-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி பிறந்தவன். என் தகப்பனர் 33-ஆம் வயதில் மரித்துப் போனராயினும் என்