பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 என் ஆசிரியப்பிரான்

தாயார் 85-ஆம் வயதில் மரித்தார்கள். நானும் சீக்கிரம் மரித்துப் போவேன் என்பது என் எண்ணமாயினும் 77 வருடங்களைக் கடந்து விட்டேன். தங்களைக் கண்டபின் இன்னும் கொஞ்ச காலம் உயிரோடிருக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாயிருக்கிறது’ என்று உளம் கனிந்து எழுதினர்.

மாளுக்கர் விளையாட்டுக்கள்

கலைமகளில் ஆசிரியப்பெருமான் 'மானுக்கர் விளையாட்டுக்கள்' என்று தலைப் பிட்டுப் பல நிகழ்ச்சிகளை எழுதியிருந்தார். மாளுக்கர்கள் தம்முடைய அறியாமையில்ை கேலி செய்தல் போன்ற &Ꮧ ☾ நிகழ்ச்சிகளைச் Զ 63) 6A1 Ա.III 5 எழுதினர். ஆசிரியப்பெருமானிடம் மாணுக்கராக இருந்த டாக்டர் டி. வி. சுவாமிநாத சாஸ் திரி என்பவர் ஒரு கடிதம் எழுதி ஞர். அவர் அப்போது தென்னுாரில் இருந்தார். தங்கள் வியா சத்தை ஆவலுடன் ஒரு வார்த்தை விடாது படித்தேன், உடனே நான் தங்களிடம் படித்ததும் ஒன்றிரண்டு செய்யுட்களுக்குப் புதிய அர்த்தங்கள் கொடுத்ததும், ஒருநாள் வைணவ நாமத்துடன் நான் வகுப்புக்கு வந்ததும் எனது ஞாபகத்திற்கு வந்தன. மகிழ்ச்சி அடைந்தேன். தங்களிடம் பாடம் படித்த எந்த மாணவரும் தங்களே மறக்க இயலாது' என்று எழுதினர். -

ராஜாஜி பாராட்டு

கலைமகளில் ஒரு சமயம் பிச்சைப் பாட்டு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஆசிரியர் எழுதியிருந்தார். பிச்சைக்காரன் சொன்ன ஒரு பாட்டு முழுவதையும் கேட்டு அதன் நயம் அறிந்து சுவையாக அதை எடுத்துச் சொன்ன கட்டுரை அது. ராஜாஜி அவர்கள் அப்போது மாம்பலத்தில் இருந்தார்கள். அதைப் படித்த அவர்கள் 28-5-1937 அன்று பின்வரும் கடிதத்தை எழுதினர். 'நமஸ் காரம். கலைமகளின் சில இதழ்கள் நான் பார்க்காமலே தவறி விடுவது உண்டு. என் தொல்லைகளின் மத்தியில் சில இதழ்களை அதிருஷ்டவசத்தால் பார்த்துப் படிக்கவும் நேரிடுகிறது. இவ்வாறு தங்கள் பிச்சைப் பாட்டுக் கட்டுரையைப் படித்து ஆனந்தம் தாங்காமல் இதை எழுதுகிறேன்.

'அதற்குத் தலைப்பு ஊரைச்சுடுமோ என்றே வைத்திருக்க லாம். இத்தகைய ஒர் இரக் தினத்தை நான் எழுதியிருந்தால் அவ்வாறு தான் பெயர் வைத்திருப்பேன். என்ன அழகான கதை: என்ன ரஸ்ம்!--இராசகோபாலாசாரி,"