பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. காந்தி தரிசனம்

1937-ஆம் ஆண்டு சென்னையில் பாரதிய சாகித்திய பரிஷத்தின் மகாநாடு நடந்தது. அதற்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தார். வரவேற்புக் குழுவின் தலைவராக யாரை நியமிப்பது என்ற யோசனை நடத்துபவர்களுக்கு உண்டாயிற்று. ஆசிரியப் பெருமானை அழைத்து அவரையே வரவேற்புரையையும் நிகழ்த்தச் சொன்னல் மகாநாடு சிறப்பாக நடைபெறும் என்று சபையைக் கூட்டியவர்கள் எண்ணினர்கள். இந்தக் கருத்தை நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஹரிஹர சர்மா ஆசிரியப்பெருமானிடம் வந்து சொன்னர். மகாத்மா காந்தி அவர்கள் இம் மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க இருப்பதனல், அவரைத் தரிசனம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதல்ை இதனை ஒப்புக் கொள்கிறேன்: என்ருர். -

அப்படியே அந்தக் கூட்டத்திற்குச் சென்ருர். முதலில் மகாத்மா காந்தியைத் தரிசித்து வரவேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. ராஜாஜி ஆசிரியப்பெருமான அழைத்துச் சென்ருர். போகும்போது நானும் உடன் சென்றேன். அப்போது மகாதேவதேசாய் வந்திருந்தார். அவரும் உடன் வந்தார். அவரது வடிவம் மனத்தைக் கவர்வதாக இருந்தது. அவரைச் சுட்டிக் காட்டி ஆசிரியப்பெருமான், இவர் யார்?' என்று ராஜாஜியிடம் கேட்டார். ராஜாஜி என்னைச் சுட்டிக் காட்டி, 'இவர் உங்களுக்கு எப்படியோ, அப்படி மகாத்மா காந்திக்கு அவர்' என்று சொன்னர். அப்போது ஆசிரியப்பெருமானின் முகம் மலர்ந்தது. மகாதேவ தேசாயைத் தரிசித்துக் கொண்டது மாத்திரம் அல்ல; தமக்கு என்னிடத்திலுள்ள பேரன்பை ராஜாஜி அறிந்திருக்கிருரே என்ற எண்ணந்தான் அந்த மலர்ச்சிக்குக் காரணம்.

- மகாத்மா காந்தி அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு நாங்கள் போனுேம். போனவுடன் ஆசிரியப்பெருமான நோக்கி காந்தி அவர்கள், கையை அமர்த்திக் காட்டி, உட்காருங்கள் ஐயா’’ என்று தமிழிலே சொன்னர். ஆசிரியப்பெருமான் காந்தியின் அருகில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு மகாசபை கூடும் இடத்திற்கு வந்தார்கள்.

3604–13