பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 என் ஆசிரியப்பிரான்

தமிழின் பெருமையும், தமிழர்களின் பெருமையும் ஆசிரியர் சங்க நூல்களில் எவ்வாறு வருணிக்கப் பெற்றுள்ளன என்பதைத் தாம் எழுதிய வரவேற்புரையில் எடுத்துக்காட்டி, மகாத்மா காந்தியை வரவேற்பதில் நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடை கிருேம் என்பதையும் எடுத்துச் சொல்லிச் சபையில் உள்ளவர் களையும் காந்தியையும் மகிழ்வித்தார். அந்த வரவேற்பை ஹிந்தியி லும் மொழி பெயர்த்து வாசித்தார்கள். அதை மொழி பெயர்த்தவர் என் நண்பர் திரு கா. பூரீ. பூரீ. அவர்கள்.

அந்த வரவேற்பைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள், 'தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. பல வேலைகளை உடைய எனக்கு அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்கப் போகிறது?’ என்று சொன்னர். மகாத்மா காந்தியாகிய தெய்வமும், தமிழ்த்தெய்வமும் சந்தித்த இந்தச் சந்திப்பு என் மனத்தை விட்டு என்றும் அகலாது. இருவரும் சத்திய சோதனை செய்தவர்கள். காந்தியடிகள் தம் வாழ்க்கையில் சத்திய சோதனை செய்தார். ஆசிரியப்பெருமான் தமிழ் நூல்களிற் சத்திய சோதனை செய்தவர். ஆசிரியப்பெருமானின் பேச்சை ஹிந்தியில் கேட்டுத் தமிழ் மொழி இலக்கியச் சுவை மிகுந்தது என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். பெருங்கூட்டமாக வந்திருந்த காகா காலேல்காரும் பிறரும் தமிழின் பெருமையை உணர்ந்து மகிழ்ந்தனர்.

வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 80-ஆம் ஆண்டு கிறைவு

வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் கால்நடை மருத்துவத் துறையில் பெரிய அதிகாரியாக இருந்தவர். தமிழ் நூல்களில் நல்ல பயிற்சி உடையவர்: முதியவர். கம்பராமாயணத்திலுள்ள அரிய பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கம்பராமாயண இன்கவித் திரட்டு என்று வெளியிட்டிருக்கிரு.ர். ஆசிரியப்பெருமானிடம் அவருக்கு அளவிலா மதிப்பு உண்டு. அவருக்குத் திருநெல்வேலியில் 80-ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 16-7-1987 அன்று பல புலவர்கள் பாராட்டிப் பேச விழா நன்முக நிறைவேறியது. அந்த விழாவுக்குத் தலைமை தாங்க வேண்டுமென்று திரு டி. கே. சி. அவர்களும், குமாரசாமி ரெட்டியார் அவர்களும் ஆசிரியப் பெருமானக் கேட்டுக் கொண்டார்கள். டி. கே. சி. மிகவும் வற்புறுத்திக் கடிதம் எழுதியிருந்தார். தங்கள் உடல் நிலையை உத்தேசித்து, தாங்கள்தாம் தலைமை வகிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதற்கு எங்களுக்குக் கொஞ்சம் தயக்கந்தான்;