பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி தரிசனம் - 1 95

என்ருலும், பல காரணங்களை எண்ணி இந்த விழாவுக்குத் தலைமை தாங்கத் தகுதிஉடையவர் தாங்களே என்பதல்ை வற்புறுத்துகிருேம் தாங்கள் சுப்பிரமணிய முதலியார் விஷயத்தில் அளவிறந்த ஆர்வம் உடையவர்கள். எப்படியும் சிரமத்தைப் பாராமல் ஆகஸ்டு மாதம் முதல் தேதி அன்று நடைபெற இருக்கும் விழாவுக்கு வந்திருந்து தலைமை வகித்துச் சிறப்பிக்க வேண்டுமென்று எழுதுகிறேன்” எனக் கேட்டுக் கொண்டார். ஆசிரியப்பெருமானும் ஒப்புக்கொண்டார். அப்படியே அங்கே சென்று விழாவை நடத்தி வைத்தார். பழுத்த பழம் ஆகிய வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் ஐயரவர்களே வரவேற்க ஸ்டேஷனுக்கு ஓடி வந்துவிட்டார். சிறுபிள்ளை போல அவர் ஒடி வந்து ஆசிரியப்பெருமான வரவேற்ருர். அந்தக் காட்சி எல்லோர் உள்ளத்தையும் உருக்கியது. அந்த முதியவருக்கு ஆசிரியரிடம் இருந்த அன்பை யாவரும் உணர்ந்து கொண்டனர்.

500 பேர் கிடைக்கவில்லை

ஆசிரியப்பெருமானுக்கு தமிழிலுள்ள எல்லா நூல்களிலும் அதிக ஈடுபாடு இருந்தது சங்க நூல்கள் முதல் நாட்டுப் பாடல் வரை எதுவானலும் அவரது கவனத்தை ஈர்த்தது. பல பிரபந் தங்கள் வெளிவராமல் இருந்தன. எப்படியாவது அவற்றை எல்லாம் மாதம் ஒன்ருகவாவது வெளியிட வேண்டுமென்று நினைத்தார். மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் தரும் வண்ணம் 500 பேர்களைச் சந்தாதாரர்களாக ஆக்கினல் மாதம் ஒன்றுக்கு ஒரு புத்தகத்தை வெளியிடலாம் என்று நினைத்தார். 1937-ஆம் வருஷம் முதல் முதலாக அழகர் கிள்ளேவிடு தூது வெளியாயிற்று, அதன் பிறகு திருவாரூர்க் கோவையை வெளியிட்டார். ஆனல் ஆசிரியப் பெருமான் நினைத்ததைப் போலப் போதிய அன்பர்கள் அதில் ஊக்கம் காட்டாமையினால் இந்த ஏற்பாடு தொடர்ந்து நடை பெற முடியவில்லை. தமிழன்பர்களில் 500 பேர்களாவது இந்த முயற்சிக்குத் தொடர்ந்து ஊக்கம் கொடுத் திருப்பார்களேயானல் எத்தனையோ பிரபந்தங்கள் வெளிவந்திருக்கும். தமிழைப்பற்றி வானளாவப் பேசுவோர் பலர் இருந்தும், புத்தகம் வாங்க ஐந்நூறு பேர் கிடைக்கவில்லையே என்று வருந்தினர். ஆசிரியர் இறைவன் ஆணை எப்படியோ அப்படித்தான் எல்லாம் நடக்கும் என்று சமா

தானம் அடைந்தார்.