பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. குறுந்தொகைப் பதிப்பு

சென்னைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாக சபையில் டி. சிவராம. சேதுப்பிள்ளை என்பவர் உறுப்பினராக இருந்தார். அவருக்கு ஆசிரியப் பெருமானிடம் மிக்க பக்தி. ஆசிரியப் பெருமானுக்குத் தாம் ஏதேனும் உதவி செய்யவேண்டுமென்று எண்ணினர்.

ஆசிரியப் பெருமான் எட்டுத் தொகை நூல்கள் முழுவதும் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தார். இடையிலே வேறு சிலர் சில நூல்களைப் பதிப்பித்துவிட்டமையில்ை அவற்றைப் பதிப்பிக்க முற்படவில்லை. என்ருலும் குறுந்தொகையை ஆராய்ச்சி செய்து கொண்டு வந்தார். அதற்கு முன்பே ஒருவர் உரை யெழுதிப் பதிப்பித்திருந்தார்; சங்கநூல்களின் மரபு தெரியாமல் ஏதோ ஒருவகையில் உரையெழுதி அச்சிட்டிருந்தார். அவர் அச்சிட்டுவிட்ட காரணத்தினுல் அதனைத் திரும்பவும் அச்சிட வேண் டாம் என்று இருந்தார் ஆசிரியர். என்ருலும் பல அரிய குறிப்புக் களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த நூலே நல்ல முறையில் வெளியிடவேண்டுமென்ற ஆர்வம் உள்ளுக் குள் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னுல் வேருெருவரால் அச்சிடப்பெற்ற குறுந்தொகை எங்கும் கிடைக்காமல் இருந்தமை யினல் தம்முடைய முயற்சியைத் தொடங்கலாம் என்று ஆசிரியர் எண்ணினர்.

குறுந்தொகை எட்டுத் தொகையில் இரண்டாவதாகச் சொல்லப் பெறுவது. அதற்கு விரிவான உரை எழுத வேண்டு மென்று கருதிப் பல குறிப்புக்களைச் சேகரித்தார். மற்ற நூல்களுக்கு ஆசிரியப் பெருமான் விரிவான உரை எழுதவில்லை; குறிப்புக்களையே கொடுத்திருந்தார். ஆனல் குறுந்தொகையை விரிவான முறையில் உரையுடன் வெளியிடவேண்டுமென்ற முய்ற்சி அவரிடம் உண்டா யிற்று. மிக ஊக்கத்துடன் ஆராய்ந்தார். நச்சிஞர்த்தினியர், பேராசிரியர் ஆகிய இரண்டு பேர்களும் முன்பே குறுந்தொகைக்கு உரை எழுதியுள்ளார்கள் என்பது வேறு சில குறிப்புக்களிலிருந்து தெரியவந்தாலும் அந்த உரைகள் எதுவும் கிடைக்கவில் ஆல. அவை கிடைக்காததல்ை ஆசிரியப் பெருமான் எதையோ இழந்துவிட்ட உணர்ச்சி பெற்றிருந்தார்.