பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகைப் பதிப்பு 1.97

ஆசிரியப் பெருமானே குறுந்தொகைக்கு உரையெழுதியவுடன் நச்சினர்க்கினியரும் பேராசிரியரும் இயற்றிய உரை கிடைக்கா விட்டாலும் அதல்ை குறையொன்றுமில்லை என்ற எண்ணம் பல பேர்களுக்கு உண்டாயிற்று. குறுந்தொகைப் பதிப்பு மிக விரிவாக அமைந்தது. ஒப்புமைப்பகுதி முதலியவை மிக விரிவாக அங்கங்கே கொடுக்கப்பட்டன. அப்படியே அகராதியும், எல்லாச் செய்திகளையும் தொகுத்து முறைப்படுத்தி அமைந்திருந்தது. அதன் முகவுரையில் ஆசிரியப் பெருமான் என்னைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிரு.ர்.

'முன்பு குறிப்பிட்ட என் பிராய முதிர்ச்சியாலும் சரீரத் தளர்ச்சி முதலியவற்ருலும் முன்போல எந்தக் காரியத்தையும் நான் கருதியபடி தனியே இருந்து நிறைவேற்ற இயலவில்லை. ஆயினும் தமிழ் நூல்களை ஆர்ாய்ந்து பதிப்பித்தலில் உள்ள ஆவல் இன்னும் தணியவில்லை. தமிழ்த் தெய்வமே அவ்வப்பொழுது என் கவலையை நீக்கி வருவதாக எண்ணுகின்றேன். கலாநிலையமாகிய சென்னைச் சர்வ கலாசாலையாருடைய பேராதரவால் வெளிவரும் இந்நூற் பதிப்பு, தமிழன்பர்கள் எதிர் பார்க்கிறபடி திருப்திகரமாக அமைய வேண்டுமே என்ற கவலை எனக்கு உண்டு. இச்சமயத்தில் மேற்கூறிய வித்துவான் சிரஞ்சீவி கி. வா. ஜகந்நாதையர் இந்நூலுக்கு நான் பல வருஷங்களாக எழுதியும் தொகுத்தும் வைத்துள்ள பல வகை யான ஆராய்ச்சிக் குறிப்புக்களையெல்லாம் என் கருத்துக்கு இணங்க முறைப்படுத்தி நல்ல வடிவத்தில் அழகு பெற அமைப்பதிற் பெரி தும் துணை புரிந்தார். அவருடைய பேராற்றலையும் எழுதும் வன்மை யையும் தமிழன்பையும் என் மனமாரப் பாராட்டுகின்றேன். அவருக்கு எல்லா நன்மைகளையும் அளித்தருளும் வண்ணம் தோன்ருத் துணையாக நிற்கும் முழுமுதற் கடவுளே இறைஞ்சு கின்றேன்' என்பது அந்தப் பகுதி. -

05ರ நெடுங் குழைக்காதர் பாமாலை

தென்திருப்பேரை என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் திருமாலின் பெயர் மகரபூஷணப் பெருமாள். அதனைத் தமிழில் மகரநெடுங் குழைக்காதர் என்று வழங்குவர். அவரைப்பற்றிய ஒரு பாமாலையை அவரது அன்பர் ஒருவர் சிறையில் இருந்த காலத்தில் பாடியதாக வரலாறு. அதனைத் திருநெல்வேலிக்குப் பக்கத்திலுள்ளவர்கள் பாராயணம் பண்ணுவது வழக்கம். அதைப் பற்றிச் சிறை நீக்கிய செய்யுள் என்ற கட்டுரையை ஆசிரியர் எழுதியிருக்கிருர், - -