பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பாட புத்தகம் எழுத மறுத்தது

இம்பகோணம் கல்லூரியில் அந்தக் காலத்தில் ராவ்பகதூர் வி. நாகோஜிராவ் என்பவர் முதல்வராக இருந்தார். அவர் இசையில் சிறப்பான பயிற்சி உடையவர்; நன்முகப் பாடுவார். இசை சம்பந்தமான சில புத்தகங்களை லாங்மென்ஸ் கிரீன் கம்பெனி மூலம் வெளியிடவேண்டுமென்று அவர் எண்ணியிருந்தார். பல கீர்த்தனங்களைத் தொகுத்து ராகம், தாளம், சுரம் முதலியன அமைத்துத் திருத்தமாக வெளியிட அவர் எண்ணியதால் அவற்றை முதலில் ஆசிரியரிடம் கொடுத்துத் திருத்திக்கொள்ள நினைத்தார். அதற்காகச் சங்கீதப் பயிற்சியுள்ள மகாராஷ்டிரர் ஒருவரை அடிக்கடி ஆசிரியர் வீட்டுக்கு அனுப்பினர்.

நாகோஜிராவ் அந்த மகாராஷ்டிரர் மூலமாக அனுப்பி வைத்த புத்தகங்களை ஆசிரியர் பார்வையிட்டு, அவற்றில் பிழை இருந்தால் அதனைத் திருத்தி அவரிடமே கொடுத்தனுப்புவார். இப்படி அடிக்கடி ஆசிரியரிடம் வந்து பழகியபோது, ஆசிரியர் காட்டிய அன்பையும், ஆசிரியருக்கு இசையில் இருந்த நல்ல தேர்ச்சியையும் அந்த மகாராஷ்டிரர் நாகோஜிராவிடத்தில் சொல்ல, அவருக்கு ஆசிரியரிடமும் முன்னலே இருந்த அன்பும், மதிப்பும் பின்னல் பன்மடங்காயின. -

ஆசிரியர் பழைய இலக்கிய நூல்களே வெளியிடுகிருர் என்றும், அதனல் அவருக்குப் பொருள் வருவாய் ஒன்றும் இல்லை என்றும், கைச்செலவே அதிகமாகிறது என்றும் நாகோஜிராவ் உணர்ந்து கொண்டிருந்தார். அதனல் எப்படியாவது ஆசிரியருக்கு நல்ல முறையில் வருவாயை ஏற்படுத்தித் தரவேண்டுமென்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. -

ஒரு நாள் கல்லூரி முடிவதற்குச் சிறிது நேரம் இருக்கும்: கல்லூரி முதல்வர், கல்லூரி விட்டபின்பு தம்மைத் தம் அறையில் வந்து பார்க்கும்படி, ஆசிரியரிடம் சொல்லச் சொல்லி ஒருவரை அனுப்பியிருந்தார். ஆசிரியரும் கல்லூரி முடிந்தவுடன், முதல்வரது அறைக்குச் சென்ருர்.

'தங்களுக்கு இப்போது ஒன்றும் அவசரமான வேலைஇல்வேயே!'

என்று கல்லூரி முதல்வர் பேச்சை ஆரம்பித்தார். 'எப்போதும் என்னுடைய நலன்பற்றிப் பல நல்ல கருத்துக்களே எடுத்துச்