பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 என் ஆசிரியப்பிரான்

சென்னைக்கு வந்த பெரும்புலவரும், கவிஞருமாகிய திரு. அனந்த கிருஷ்ணயங்கார் அந்தப் பாமாலையை நல்ல முறையில் அச்சிட வேண்டுமென்ற தம் விருப்பத்தை ஆசிரியப்பெருமானிடம் தெரிவித்திருந்தார். ஆசிரியப்பெருமான் அப்படியே அந்தப் பாமாலைக்குக் குறிப்புரை எழுதி, அதைக் கலைமகள் பத்திரிகையில் அனுபந்தமாக வெளியிட்டார். பிறகு அது தனிப் புத்தகமாகவும் வந்தது. அந்தப் பதிப்பு அந்தப் பாமாலையின் சிறப்பை மிகுதிப் படுத்தி யாவரையும் மகிழ்வித்தது. ஆசிரியப்பெருமான் கை வண்ணம் பெற்ற எந்த நூலும் தனிச்சிறப்புடன் விளங்குவதைத் தமிழுலகம் நன்கு அறியும்.

பள்ளிக் கூடத்துக்கு கிலம் தந்தது

ஆசிரியப்பெருமான் ஒருமுறை திருவாவடுதுறைக்குச் சென்று விட்டுத் தம் ஊராகிய உத்தமதானபுரத்திற்குச் சென்றிருந்தார். அப்போது போர்டு எலிமெண்டரிப் பள்ளிக்கூடம் ஒன்று அக்கிர காரத்திற்குள் நடந்து வந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தில் ஹரிசனச் சிறுவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சிலர் ஆலோசனை கூறினர்கள். அக்கிரகாரத்திற்குள் இருக்கும் பள்ளிக் கூடத்தில் ஹரிசனப் பிள்ளைகள் வந்து படிப்பது என்பது சரியல்ல என்று அங்கிருந்தவர்களுக்கு ஒர் எண்ணம் உண்டாயிற்று. எனவே, பள்ளிக்கூடத்திற்கு வேறு இடம் பார்க்கலாம் என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள். அப்போது கிராமத்திற்குச் சென்றிருந்த ஆசிரியரிடம் இந்தச் செய்தியைக் கிராம முன் சீப் அண்ணுசாமி ஐயர் வந்து தெரிவித்தார்.

அக்கிரகாரத்திற்குப் புறம்பாக ஒரு புன்செய் நிலம் ஆசிரியப் பெருமானுக்குரியதாக இருந்தது. அந்த இடத்தில் பள்ளிக் கூடத்தைக் கட்டினல் எல்லோரும் வந்து படிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று எண்ணிய ஆசிரியப்பெருமான் அந்த இடத்தையே, பள்ளிக்கூடத்திற்கு என்று தானமாக வழங்கினர். கிராமத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று, ஆசிரியப் பெருமான் விருப்பப்படியே, அவருடைய சிறிய தந்தையார் பெயரில் அந்தப் பள்ளிக்கூடத்திற்குச் சின்னசாமி நிலையம் என்ற பெயரை அமைத்தனர். உத்தமதானபுரம் குளக்கரையில் அந்தப் பள்ளிக்கூடம் சின்னசாமி நிலையமாக விளங்கி வந்தது.

குமரகுருபரர் பிரபந்தங்கள்

திருப்பனந்தாள் மடத்திற்குக் காசி மடம் என்ற பெயர் உண்டு. குமரகுருபர முனிவர் காசியில் இருந்து சைவத்தையும் தமிழையும் பரப்பினர். அவருக்குப் பின் வந்த பரம்பரையில் ஒருவர் திருப்பனந்