பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகைப் பதிப்பு 1 99

தாளில் ஒரு மடத்தை நிறுவினர். காசியில் இருந்த முனிவர் நிறுவியதால் அதற்குக் காசிமடம் என்றும் அதன் தலைவர்களுக்குக் காசிவாசி என்ற சிறப்புப் பெயரும் வழங்கலாயின. அந்த மடத்தில் தலைவர்களாக இருந்தவர்கள் ஆசிரியப்பிரானிடம் பெருமதிப்பு உடையவர்களாக இருந்தார்கள். அங்கே சாமிநாதத் தம்பிரான் சுவாமிகள் மடத்தின் தலைவராக இருந்தார். ஐயரவர்களிடம் பாடம் கேட்ட சொக்கலிங்கத் தம் பிரான் சுவாமிகளுக்குப் பிறகு அந்த மடத்தின் தலைவராக ஆனர். அவர் கொட்டையூர்ச் சிவக் கொழுந்து தேசிகர் பரம்பரையில் வந்தவர் அவருக்குத் தம்முடைய மடத்தின் முதல்வராகிய குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்களே நல்ல முறையில் ஐயரவர்களைக் கொண்டு அச்சிடவேண்டுமென்ற அவா உண்டாயிற்று. ஐயரவர்கள் பதிப்பித்தால் அதற்குத் தனி மெருகு ஏறும் என்று எண்ணினர். தம் விருப்பத்தை ஒருமுறை குமரகுருபரர் திருநாளுக்கு ஆசிரியப்பெருமான் சென்றிருந்த போது சாமிநாதத் தம் பிரான் வெளியிட்டார். அதுமுதல் ஆசிரியப்பெரு மான் அந்தப் பிரபந்தத்திற்குக் குறிப்புக்களே எழுதத் தொடங்கி ஞர். பல காலமாகச் சேகரித்து வந்த குறிப்புக்களைக் கொண்டு அதற்கு மிகவும் விரிவான முகவுரையை அமைத்தார். குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தம் 16-9-1939-இல் வெளிவந்தபோது சாமி நாதத் தம்பிரானுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

காசிவாசிப் பெருமான் செய்த அரிய செயல்

ஒரு முறை அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு குமரகுருபர சுவாமிகள் திருநாளுக்கு ஆசிரியப் பெருமான் திருப்பனந்தாள் சென்றிருந்தார். அப்போது ஆசிரியப் பெருமானைத் தனி இல்லத்தில் இருக்கச் செய்து, வேண்டிய உபசாரங்களைச் செய்யும்படி மடாலயத் தலைவர் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆசிரியப்பெருமான் வந்திருப்பது தெரிந்து பல புலவர்கள், பெரியவர்கள் வந்திருந்து ஆசிரியருடன் அளவளாவுவார்கள். பொழுது போவதே தெரியாது. அவர் தங்கிய இடத்திற்குத் தேர்ச்சிலை முதலியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்வது வழக்கம்.

ஒருநாள் மாலை ஏழு மணி இருக்கும்; ஆசிரியப்பெருமான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நானும், வேறு சில மாணவர்களும் பக்கத்தில் அமர்ந்திருந்தோம். அந்தச் சமயத்தில் கொல்லேப்புறக் கதவின் தாழ்ப்பாள் ஒசைப்பட்டது. மங்கலான வெளிச்சத்தில் யார் உள்ளே வருகிருர்கள் என்பது ஆசிரியப்