பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 என் ஆசிரியப்பிரான்

பெருமானுக்குத் தெரியவில்லை. திருப்பனந்தாள் மடத்தின் தலைவர் மெல்ல உள்ளே நுழைந்து வந்தார். நாங்கள் எழுந்து நின்ருேம். "யார் வருகிருர்கள்' என்று ஆசிரியப்பெருமான் கேட்டபோது, எசமான் சுவாமிகள் வருகிருர்கள்' என்று சொன்னுேம். அந்த மடத்தின் அதிபர்களை எசமான் சுவாமிகள் என்று வழங்குவது மரபு. அப்படியா?” என்று அவர் எழுந்திருந்தார். தம்பிரான் சுவாமிகள் ஆசிரியப்பெருமானிடம் வந்தவுடன், சொல்லி அனுப்பி யிருந்தால் நானே தங்களிடம் வந்திருப்பேனே, எதற்காகத் தாங்கள் இப்படிப் பின்புறக் கதவு வழியாக வரவேண்டும்?' என்று அன்போடு ஆசிரியப்பெருமான் கேட்டார்.

சாமிநாதத் தம்பிரான் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் பரம்பரையில் வந்தவர். அந்தத் தேசிகர் கோடீச்சுரச் கோவை, தஞ்சைப் பெருவுடையார் உலா, சரபோஜி பூபாலர் குறவஞ்சி என்ற மூன்று நூல்களை இயற்றியிருக்கிரு.ர். அவற்றை ஆசிரியர் அழகிய முறையில் பதிப்பித்திருந்தார். அன்றியும் திருப்பனந்தாளின் முதல்வராகிய, குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்களையும் குறிப்புரை முதலியவற்றுடன் வெளியிட்டி ருந்தார்.

“தாங்கள் செய்திருக்கும் உபகாரத்திற்கு இது ஒரு பொருட்டா? தாங்கள் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்களைப் பதிப்பித்ததன் மூலம் நான் பிறந்த குலத்தை உயர்த்திவிட்டீர்கள்; குமரகுருபரர் பிரபந்தங்களை வெளியிட்டு நான் புகுந்த மடாலயத்தின் சிறப்பையும் உயர்த்திவிட்டீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது” என்று சொல்லி ஆயிரம் ரூபாயை ஆசிரியப்பெரு மானிடம் வழங்கினர். ஆசிரியப்பெருமானுக்கு அளவிறந்த வியப்பு உண்டாயிற்று. பிறர் அறியாமல் இப்படி வந்து பொருளுதவி செய்கிருரே என்ற எண்ணம் உண்டாயிற்று. உள்ளத்தை நெகிழச்செய்யும் இந்த நிகழ்ச்சியை ஆசிரியப்பெருமான் பலரிடம் அடிக்கடி சொல்லிச் சொல்லி உருகியது உண்டு. .

ஹிந்தியைப் பற்றி

1938-ஆம் ஆண்டு சுப்பராயன் அவர்கள் கல்வி மந்திரியாக இருந்தார். அப்போது இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் நாட்டில் இருந்து வந்தது. பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமா கப் போதிக்க வேண்டுமென்ற முயற்சிக்கு எதிர்ப்பு அதிகமாக இருந் தது. டாக்டர் சுப்பராயன் அவர்கள் இந்தியைப் பொறுத்தவரையில் ஆசிரியப்பெருமானுடைய கருத்து இன்னது என்று தெரிந்து கொள்