பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகைப் பதிப்பு 201

வதற்காக வந்திருந்தார். அதைப்பற்றி ஆசிரியப்பெருமான் சொல்லும்போது, “இந்தி படிப்பதில் தவறு இல்லை; ஆனல் அதனைக் கட்டாய பாடமாக்கக் கூடாது' என்ற தம் கருத்தைத் தெரி வித்தார். அதைக் கேட்டுச் சுப்பராயன் அவர்கள் ஒருவித ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஆயினும் ஆசிரியப்பெருமான் தம் உள்ளத்தில் தோன்றியதைச் சொன்னர்.

திருச்சி வானுெலி

திருச்சியில் அகில இந்திய வானெலி நிலையம் தொடங்கிய போது முதல்முதலாக ஆசிரியப்பெருமான் அங்கு வந்து பேசவேண்டு மென்று அழைத்தார்கள். ஆசிரியப்பெருமானுக்கு உடல் நலம் சரியாக இல்லாமையில்ை போகமுடியவில்லை. ஆயினும் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினர். அதனை அங்குள்ளவர்கள் படித்து ஒலி பரப்பினர்கள். அந்தக் கட்டுரையில் பிள்ளையவர்களின் சிறப்பை விரிவாக எழுதினர். அந்தக் காலத்தில் அவர் ஒரு தமிழ் ஒலிபரப்பு நிலையமாக விளங்கினர் என்ற கருத்தை அதில் தெரிவித்திருந்தார்.

கலைமகள் கோவில் திறப்பு விழா

செட்டிநாட்டில் கொப்பனப்பட்டி என்ற ஊரில் மெய்யப்பச் செட்டியார் என்ற செல்வர் நம்முடைய பண்பாட்டு முறையில் கல்வி கற்பிக்கவேண்டுமென்று கலைமகள் கல்லூரி' என்று பெண்களுக் கென்று ஒரு பள்ளிக்கூடம் தொடங்கினர். அந்தக் கல்லூரியில் கலே மகளுக்கு ஒரு சிறு கோவில் அமைத்து அங்கே நாள்தோறும் மாணவி ஆகள் வந்து வழிபாடு செய்து வகுப்பறைகளுக்குச் செல்லுமாறு செய் தார். அந்த கோவிலைக் கட்டின பிறகு ஆசிரியப்பெருமான் வந்து அந்தக் கோவிலைத் திறந்து வைப்பது பொருத்தம் என்று எண்ணினர். ஆசிரியப்பெருமானுக்கு அப்போது முதுமையில்ை மிக்க தளர்ச்சி உண்டாகியிருந்தது. என்ருலும் மெய்யப்பச்செட்டி யார் நேரில் வந்து, கோவிலைத் திறந்து வைக்க, தாங்கள்தாம் வரவேண்டும்' என்று வற்புறுத்தினர். சென்றுவர எல்லாச் செளகரியங்களையும் செய்து கொடுப்பதாகச் சொன்னர். அப்படியே ஆசிரியப்பெருமான் 1-6-1939 இல் அங்குச் சென்று அந்தக் கலைமகள் கோவிலைத் திறந்து வைத்தார். செட்டிநாட்டு நண்பர்கள் பலர் அந்தச் சமயத்தில் அங்கு வந்திருந்து தங்கள் தங்கள் வீடுகளுக்கு வர வேண்டுமென்று அழைத்தார்கள். முதுமை காரணமாகப் பல விடங்களுக்கும் போக முடியவில்லை. என்ருலும் பல பெரியவர்கள் வந்து பார்த்து விட்டுச் சென்ருர்கள்.