பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 . என் ஆசிரியப்பிரான்

டாக்டர் பைதான்

ஜெர்மன் தலைநகராகிய பெர்லினில் டாக்டர் என். பைதான். என்பவர் இருந்தார். அவர் ஒரு பாதிரியார். ஜெர்மன் மிஷனில் கும்பகோணத்தில் பல ஆண்டுகள் இருந்தவர். அங்கே இருந்த, போது தமிழ் நூல்களைக் கற்ருர். பெர்லின் நகர் திரும்பிய பிறகும். அங்கே தமிழாசிரியராக இருந்து ஆராய்ச்சி செய்து வந்தார்.

தறிட்லர் ஆர்?’ என்ற புத்தகத்தை அவர் அப்போது எழுதியிருந். தார். அவர் அடிக்கடி ஆசிரியப்பெருமானுக்கு நீண்ட கடிதம் எழுதுவது உண்டு. தாம் கும்பகோணத்தில் இருந்தபோது பலரைக் சந்தித்த செய்திகளே எழுதுவார். ஆசிரியப்பெருமான் எழுதிய சில: தமிழ்க் கட்டுரைகளை அவர் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து. வெளியிட்டார். -

,என் சரித்திரம்:

ஆசிரியப்பெருமானுக்குச் சதா பிஷேகம் நடந்தபோது அவர் தம்முடைய வரலாற்றை எழுத வேண்டுமென்று பல நண்பர்கள் வற்புறுத்தினர்கள். அப்போது ஆனந்தவிகடன் ஆசிரியராக இருந்த கல்கி அவர்கள் வாரந்தோறும் அவரது சரித்திரத்தை விகடனில் எழுதி வந்தால் அதைப் பலரும் விரும்பிப் படித்தறிய, முடியும் என்ருர். ஆனால் அப்போது அதை எழுத முடியவில்லை.

மறுபடியும் 1939-ஆம் ஆண்டுக் கடைசியில் கல்கி அவர்கள் நேரில் வந்து எப்படியாவது 1940-ஆம் வருஷம் முதல் அந்த வரலாற்றை எழுத வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். அப்போது ஆனந்தவிகடன் ஆசிரியராக அவர் இருந்தார். ஆசிரியப் பெருமானுக்கும் தம்முடைய சரித்திரத்தை விரிவான முறையில் எழுத வேண்டுமென்ற அவா இருந்தது. ஆகவே, 1940-ஆம் ஆண்டு. ஜனவரி மாதத்தில் ஆனந்தவிகடனில் என் சரித்திரம்' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார். அதற்காகப் பலபல இடங்களுக்கு எழுதி அங்கங்கே உள்ள கட்டிடங்களையும், கோவில்களேயும் படம் எடுத்து அனுப்பச் சொல்லி வெளியிட்டார்.

"என் சரித்திரம்” தொடர்ந்து வெளிவந்தபோது பலர் அதைப் படித்துப் பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த நிலைமையை அறிந்து பாராட்டி எழுதினர்கள். ஆல்ை 1942-ஆம் ஆண்டு. ஏப்ரல் மாதம் 28-ஆந் தேதி ஆசிரியப்பெருமான் அவர்கள் கால, மானதால் அந்த வரலாறு முற்றுப் பெறவில்லை.