பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகைப் பதிப்பு 203.

நோயும் சிகிச்சையும்

1939-ஆம் ஆண்டு நவம்பர் முதலிலிருந்தே ஆசிரியப் பெருமானுக்குச் சிறுநீர் கழிக்கும் இடத்தில் ஏதோ ஒரு புண் இருந்து வந்திருக்கிறது. அதை அவர் வெளியில் சொல்லவில்லை. ஆனல் அது வர வர அதிமாகித் தொல்லை கொடுத்து வந்தது. அதை அறிந்து அவருடைய குமாரர் தக்க மருத்துவரிடம் காட்ட வேண்டுமென்று எண்ணி என்னை அழைத்துக்கொண்டு டாக்டர் திருமூர்த்தியிடம் சென்ருர். அவர் வந்து பார்த்தார். அது கான்சர் என்று தெரியவந்தது. உடனே சிகிச்சை செய்யாவிட்டால் அது படர்ந்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் என்ற உண்மை யைச் சொன்னர். அப்பால் எப்படிச் சிகிச்சை செய்வது என்று. எண்ணினர்கள்.

1940-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டாக்டர் திருமூர்த்தி' திரும்பவும் வந்து எப்படியாவது ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவைச் சிகிச்சை செய்யவேண்டுமென்று வற்புறுத்திவிட்டுப் போளுர். அப்பால் 21-1-1940 அன்று ராயபுரம் ஆஸ்பத்திரியில் ஆசிரியப் பெருமானைச் சேர்த்தார்கள். அங்கே முக்கிய டாக்டராக இருந்த, டாக்டர் கனகசபேசன் என்பவர் ஆசிரியப்பெருமானுக்கு வேண்டிய சிகிச்சை செய்தார். ஆசிரியர் ஆஸ்பத்திரியில் இருந்தபோது எல்லோருக்கும் அச்சம் உண்டாயிற்று. அப்போது அவர்களுடைய சரித்திரம் ஆனந்தவிகடனில் வந்து கொண்டிருந்ததால் அவரைப் பற்றி அறிந்த பலரும் நிறையக் கடிதங்கள் எழுதி விசாரித்தார்கள். சிலர் நேரிலேயே வந்து பார்த்துச் சென்ருர்கள். அறுவை மருத்துவத்திற்குப் பின்பும் வயிறு வீக்கம் முதலிய தொல்லைகள் ஏற்பட்டன. ஆனல் டாக்டர்களது சிறந்த மருத்துவத்தில்ை எல்லாத் தொல்லைகளும் இறைவன் திருவருளால் நீங்கின. 2-3-1940 அன்று ராயபுரம் ஆஸ்பத்திரியிலிருந்து ஆசிரியர் தியாகராச விலாசம் வந்து சேர்ந்தார்.

சுப்பராயன் விருப்பம்

சென்னையில் கல்வி மந்திரியாக இருந்த திரு சுப்பராயன் ஆசிரியப்பெருமானிடம் கல்லூரியில் படித்தவர். அவர் ஆசிரியப் பெருமானை அடிக்கடி வந்து பார்த்துப் பேசிப்போவார். அவர் சிறைக்குச் செல்லும் முன்பு ஒரு கடிதம் எழுதினர். "தங்கள் சரித்திரத்தை நான் வாரந்தோறும் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். சிறையிலும் படிக்கக்கூடிய பாக்கியம். கிடைக்கவேண்டும் என்பது என் ஆசை என்று எழுதினர்.