பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 என் ஆசிரியப்பிாான்

திருவாவடுதுறை ஆதீன வரலாறு

திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து படித்தமையில்ை ஆசிரியருக்கு அந்த ஆதீனத்தின் மீது அளவிடமுடியாத அன்பு இருந்தது. அவர் எங்கே பேசினலும் திருவாவடுதுறையைப்பற்றிச் சொல்லாமல் இருக்கமாட்டார் என்பதை முன்பே சொல்லியிருக் கிறேன். அந்த ஆதீனம் பிள்ளையவர்களை ஆதரித்த நினைவும், தாம் அங்கே படித்து முன்னுக்கு வந்த நினைவும் சேர்ந்து அந்த மடத்தைப் பற்றிய வரலாற்றை விரிவாக எழுத வேண் டு .ெ ம ன் று நினைத்தார்.

அப்போது மடத்தில் இருந்த சங்கரலிங்கத் தம்பிரான் என்பவரும் ஆதீன வரலாறு ஆசிரியப்பெருமானல், எழுதப்பெற்று வெளிவந்தால் தமிழுலகம் படித்து மிகவும் இன்புறும் என்கிற தம் விருப்பத்தை ஆசிரியருக்குத் தெரிவித்தார். ஆசிரியப்பெருமானும் அதற்குரிய குறிப்புக்களைச் சேகரித்தார். ஆனல் அது நிறைவேற வில்லை. முக்கியமாக, சுப்பிரமணிய தேசிகரைக் குறித்துப் பிள்ளை யவர்களின் சரித்திரத்தில் எழுதியிருக்கிருர். அதற்குப் பின்பு 17ஆவது பட்டத்தில் இருந்தவரைப் பற்றியும் விரிவாக எழுதவேண்டு மென்று ஆசிரியர் நினைத்தார். ஆனல் காலம் இல்லாமையினால் அதை எழுத முடியாமல் போயிற்று.

இதய ஒலிக்கு மதிப்புரை

திரு டி.கே. சிதம்பரநாத முதலியார் மிகவும் சுவையாகப் பேசுவார். ஆசிரியப் பெருமானிடம் மிக்க அன்பு உடையவர். கம்பராமாயணத்தில் அதிகப் பற்று உடையவர். அவர் சொற் பொழிவைக் கேட்ட பலர் கம்பராமாயணத்தைப் படிக்கத் தொடங் கினர்கள். அவருடைய விளக்கங்கள் நாடக பாணியில் அமைந் திருக்கும். அவருடைய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 'இதய ஒலி என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டார்கள். அதை ஆசிரியப்பெருமானுக்கு அனுப்பினர். அதைக் கண்டு ஆசிரியப் பெருமானுக்கு மிக்க உவகையுண்டாயிற்று. அந்த உவகையினல் அதைப் பாராட்டி 6.4-1941-இல் ஒரு கடிதம் எழுதினர்.

“தாங்கள் அனுப்பிய இதய ஒலி என்ற கட்டுரைத்தொகுதி கிடைத்தது. அருமை மகனே இழந்த துக்கத்தில் ஆழ்ந்திருக்கிற தரங்கள் ஞாபகம் வைத்து இங்கிருந்து போனவுடனே அனுப்பியது பற்றி என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.