பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுக்தொகைப் பதிப்பு 205.

'இந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்களில் பெரும்பாலன. வற்றை முன்பே படித்திருக்கிறேன். இப்போதும் படிக்கக் கேட், கிறேன். இனியும் கேட்பேன். கேட்கக் கேட்கச் சுவை முதிர் கின்றதேயொழியத் தளர்ச்சி தோன்றவில்லை.

'இதயத்தில் எழுகின்ற ஒலிகளே இந்த உருவத்தில் எழுதும் திறமை உங்களிடம் இருப்பதைத் தமிழ்நாட்டார் பல காலமாக அறிந்து மகிழ்ச்சி அடைந்திருக்கிருர்கள். தங்கள் கட்டுரைகளைச் சேர்த்து அச்சிட்டுக் கொடுத்திருக்கும் உபகாரத்தை அவர்கள் பாராட்டிப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதில் தடையில்லை.

சொல்லுகிற விஷயத்தை மற்ழவர்கள் சந்தோஷமாக அனுபவித்துக் கேட்கும்படி சொல்வதென்பது எல்லோருக்கும் வராது, அந்த விஷயத்தைத் தாங்களே அனுபவிக்காமல் பேசி வரும்போது மற்றவர்களுக்கு எப்படித் தெளிவாகும்? தாங்கள் முதலில் அனுபவிக்கிறீர்கள். ஒரு முறை அல்ல; பல முறை. அனுபவிக்கிறீர்கள். உங்கள் இதயத்தைத் தொட்டு எழும் அந்தச் சுவை மிகுந்த உணர்ச்சி ஒலிக்கிறது; உரையாக எழுத்தாக ஒலிக் கிறது. அப்படி ஊறி எழுந்த அந்த ஒலி மற்றவர்கள் இதயங் களேயும் தொட்டு இன்புறுத்துகிறது.

'ருசி கண்ட தமிழர்கள் இன்னும் வேண்டும் வேண்டுமென்று உங்களைக் கேட்டுத் தொந்தரவு கொடுக்கப் போகிருர்கள். அவர்கள் ஆவலேத் தணிக்கும் முயற்சிக்கு ஏற்ற மன அமைதியையும், ஊக்கத் தையும், செளகரியத்தையும் தங்களுக்கு அருளும் வண்ணம் இறைவனைச் சிந்திக்கிறேன்' என்று எழுதினர்.

அந்தக் கடிதத்தைக் கண்டு டி. கே. சி. மிக்க உற்சாகத்துடன் 14-4-1941 இல் பதில் எழுதினர்.

'நமஸ்காரம். இதய ஒலி புத்தகத்தைப் பார்த்துவிட்டு எழுதியனுப்பிய கடிதம் கிடைத்தது. நேரான அனுபவத்தைக் கடிதத்தில் அப்படியே விளக்கியிருக்கிறீர்கள். இங்கே ஆவுடையப்பப் பிள்ளையவர்கள் முதலான பல நண்பர்களும் கடிதத்தை வாசித்துப் பார்த்து ரொம்ப அனுபவித்தார்கள். இப்படி இதயத்தில் பட்டதை எழுகிறவர்கள் தமிழ் நாட்டில் மிக அருமை என்று சொல்லி வியக்கவும் செய்தார்கள்.

'இதய ஒலியைப் படிக்கக் கேட்கிறேன், இன்னும் படிக்கக் கேட்பேன் என்று தாங்கள் பிரியத்தை அருமையாகக் காட்டியிருக் கிறீர்கள். மேற்படி விஷயத்தை நான் அனுபவித்தால் மட்டுமே