பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 என் ஆசிரியப்பிரான்

பிறரை அனுபவிக்கச் செய்ய முடியும் என்ற அரிய உண்மையை அழகாய் எடுத்துச் சொல்லுகிறீர்கள்.

என்னுடைய கட்டுரையை அப்படியாக ரொம்பப் பேர் அனுபவித்து விடுவார்கள் என்ற அபிப்பிராயம் எனக்குக் கிடை யாது. விஷயம் நடையெல்லாம் பண்டித உலகத்துக்கு உகந்தவை அல்ல என்பது எனக்குத் தெரியும். தங்களுக்கும் ஒருவாறு தெரிந்த விஷயந்தான். ஆனல் தங்களுக்கு உவந்தவைதாம் என்று தெரிவதிலும், தமிழர்கள் இது மாதிரி வேண்டும் என்று தொந்தரவு செய்வார்கள் என்று ஆசி கூறுவதிலும் எனக்கு எவ்வளவோ திருப்தியும் எவ்வளவோ ஊக்கமும் பிறக்கின்றன.

“தாங்கள் பாராட்டி எழுதியதுபோல் தமிழ்ப் பயிற்சி உடைய வர்கள் யாவரும் பாராட்ட மாட்டார்கள் என்பது என் அபிப்பிராயம். நண்பர்களுடைய அபிப்பிராயமும் கூடத்தான். என் மனமார்ந்த நன்றியைச் செலுத்திக்கொள்கிறேன்.

--- தங்கள் அன்புள்ள

டி. கே. சிதம்பரநாதன்”

7-12-1941-இல் கொள்ளுப்பேரன் வேங்கடகிருஷ்ணளுல் கனகரத்னபிஷேகம் ஆசிரியருக்கு நடைபெற்றது,