பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறுதிக்காலம்

கீழே விழுந்தது

1942-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி திங்கள் கிழமை வழக்கம் போல் ஆசிரியர் மேல் மாடியில் ஒரு பெஞ்சியில் படுத் திருந்தார். விடியற்காலம் 4 மணி இருக்கும். எழுந்திருந்து கீழே வரும் போது விழுந்துவிட்டார். முழங்காலில் அடிபட்டு இரத்தம் வந்தது. நினைவு இல்லாமல் மயக்கத்துடன் அமர்ந்துவிட்டார். அவரைத் தூக்கி வந்து ஒரு நாற்காலியில் அமர வைத்தார்கள். பின்புதான் ஞாபகம் வந்தது காலில் வலி அதிகமாகப் பொறுக்க முடியாத அளவு இருப்பதாகத் தெரிவித்தார்.

காலையில் ஒரு டாக்டர் வந்து பார்த்து, சுளுக்கு இல்லை என்று சொல்லி, சில தைலங்களைக் கொடுத்துத் தடவச் சொல்லிவிட்டுச் சென்ருர்; ஒரு கட்டும் போட்டுவிட்டுச் சென்ருர் பின்னர்ச் சில தினங்கள் டாக்டர் தினமும் வந்து பார்த்தார். வலி குறையவே

பிறகு டாக்டர் திருமூர்த்தி ஆசிரியப்பெருமான வந்து பார்த்தார். எலும்பு முறிவு இருக்கலாமோ என்று சந்தேகித்து எக்ஸ்ரே எடுக்கச் சொன்னர், எக்ஸ்ரேயில் இடுப்பில் எலும்பு முறிவு இருப்பதாகத் தெரிந்து. உடனே டாக்டர் வேண்டிய சிகிச்சை செய்து படுக்கையிலேயே படுத்திருக்க வேண்டுமென்று சொன்னர். -

நோயில்ை, படுத்த படுக்கையில் இருந்த நிலையிலும் ஆசிரியப் பெருமான் பாடம் சொல்வதை விடவில்லை. எந்த வகையான இளைப்பு இருந்தாலும் பிறருக்குப் பாடம் சொன்னல் அந்த இளைப்பு அவருக்கு மறந்தே போகும். தமிழே மருந்தாக இருந்தது.

திருக்கழுக்குன்றம் சென்றது

அப்போது 2-ஆவது உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந் தது. சென்னையில் உள்ளவர்கள் எல்லாரும் குடும்பத்தைக் கலைத்துக் கொண்டு வெளியூருக்குப் போளுர்கள். முக்கியமாகப் பெண்களே வெளியூருக்கு அனுப்பிவிட்டுச் சிலபேர்கள் மாத்திரம் சென்னையில் இருந்தார்கள். மருந்துகள் இங்கே சரியாகக் கிடைக்கவில்லை.