பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 என் ஆசிரியப்பிரான்

சொல்லும் தங்களோடு பேசுவதைவிட அவசரமான காரியம் வேறு என்ன எனக்குஇருக்கிறது?’ என்று ஆசிரியர் சொன்னர். அப்போது நாகோஜிராவ் சொல்லலானர்.

“தாங்கள் தமிழில் உள்ள பழைய அரிய பெரிய நூல்களைப் பதிப் பித்து வருகிறீர்கள். அதனல் தங்களுக்கு லாபம் எதுவும் இல்லை என்பது எனக்கு நன்ருகத் தெரியும். எனினும் தங்கள் பதிப்புக்கு உதவியாகப் பணம் அதிகம் வேண்டும். இதை எல்லாம் எண்ணி அதிக வருவாய் கொடுக்கும்படியான ஒரு யோசனையைச் சொல் வதற்காகத்தான் தங்களை அழைத்தேன். நான் பல வருஷங்கள் பள்ளிக்கூடத்து இன்ஸ்பெக்டராக இருந்தேன் என்பது தங்களுக்குத் தெரியும். பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்கப் பெறுகிற புத்த கங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு அவற்றில் எதுவும் திருப்தி அளிக்கவில்லை. தனித்தனியாக எழுதவேண்டும்; பிழை யின்றி அச்சிடப்பெறவேண்டும். அப்படி எந்தப் புத்தகமும் கிடைக்கவில்லேயே என்று வருந்திக்கொண்டிருந்தேன். தாங்களே முதல் வகுப்பு முதல் மூன்ரும் பாரம் வரையிலான தமிழ்ப்பாடப் புத்தகங்களை உரைநடையில் எழுதினல், அவற்றை லாங்மன்ஸ் பதிப் பகத்தார் வெளியிடுவார்கள். தங்களுக்கும் நல்ல முறையில் சம்மானம் வழங்குவார்கள். அந்த நூல்கள் பள்ளி மாணவர்களுக்கும் நல்ல பயன்தரத் தக்கனவாக இருக்கும் அல்லவா?' என்று சொன்னர்.

இதைக்கேட்டவுடன் ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று நாகோஜிராவ் நினைத்திருக்கக்கூடும். ஆசிரியரிடம் எந்த விதமான மகிழ்ச்சியும் உண்டாகவில்லை. என்ன யோசிக்கிறீர்கள்? நான் இதற்கு ஏற்பாடு செய்யட்டுமா?’ என்று நாகோஜிராவ் கேட்டார்.

ஆசிரியர் சொன்னர்: 'நான் தங்களுடைய அன்பைப் பாராட்டுகிறேன். எனக்குள்ள துன்பங்களை எல்லாம் தாங்கள் நன்ருகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதுவே எனக்குப் போதுமானது. தாங்கள் மாத்திரம் அல்ல. வேறு சில அன்பர்களும் பாடப் புத்தகங்களை நான் எழுத வேண்டுமென்று சொல்லி வருகிருர்கள். எனக்குப் பணம் முக்கியம் அல்ல. என்னுடைய நேரம் முழுவதும் இப்போது கல்லூரியில் பாடம் சொல்வதிலும், தமிழ் நூல்களே ஆராய்வதிலும் கழிகின்றது. தமிழ் நூல் ஆராய்ச்சிக்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும் போதாது. நான் வேறு துறையில் இறங்கினல் நூல் ஆராய்ச்சிக்கு வேண்டிய பொழுது கிடைக்காது. அது மாத்திரம் அல்ல. அதிக அளவுக்குப் பணம் வந்து, செல்வ ஆசையும் பிறந்துவிட்டால், பழைய நூல்களை