பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 என் ஆசிரியப்பிரான்

அந்தச் சமயத்தில் சென்னையில் இருந்து திருக்கழுக்குன்றத்தில், திருவாவடுதுறை மடத்துக்குச் சொந்தமான ஒரு வீட்டில் ஆசிரியப் பெருமான் போய்த் தங்கியிருக்கலாம் எனத் தீர்மானம் செய்தார் கள். அதன்படி ஏப்ரல் மாதம் 11-ம் தேதி பகல் 3 மணிக்குக் காரில் ஏறிப் புறப்பட்டார்கள். -

  • பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு

மான்உன் நாமங்கள் பேசுவார்க் கிணக்கி லாததோர் இன்ப மேவருங்

துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கி லாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின் 怒 . . . 哆 酸 _ "கணக் கிலாத்திருக் கோலம் வேந்து காட்டிய்ை

கமுக் குன்றிலே’

-திருவாசகம்

என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டார். புறப்படும்போது தம் வீட்டைப் பார்த்து, அந்த வீட்டுக்கு மீண்டும் வருவனே என்று மிகவும் வருத்தத்தோடு கேட்டார்.

நான்கு மணிக்குத் திருக்கழுக்குன்றம் போய்ச் சேர்ந்தது வண்டி. அங்கேயுள்ள சந்நிதித்தெருவில் திருவாவடுதுறை மடம் இருந்தது. அங்கே தங்கினர்கள்.

தம்முடைய புத்தகங்களையும் ஏட்டுச் சுவடிகளையும் விட்டுவிட்டு வந்துவிட்டதை ஆசிரியப் பெருமான் விரும்பவில்லை. குழந்தைகளைப் பிரிந்த தாய்போல அவர் நெகிழ்ந்தார். அவரது வேதனையை, உணர்ந்து ஏட்டுச் சுவடிகளையும், புத்தகங்களையும் சென்னையிலிருந்து. திருக்கழுக்குன்றத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். பத்து மாட்டு வண்டிகளில் அந்தப் புத்தகங்கள் எல்லாம் வந்து சேர்ந்தன. அதைக் கண்ட பிறகுதான் ஆசிரியப்பெருமானுக்கு ஒரளவு ஆறுதல் உண்டாயிற்று.

உடல் நலிவு

திருக்கழுக்குன்றம் வந்த பிறகு உடல் நலத்தில் கொஞ்சம் முன்னேற்றம் உண்டாயிற்று. மெல்ல எழுந்து உட்காரத் தொடங் கினர். தம்முடைய வரலாற்றை முற்றும் எழுதி முடித்துவிட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆகவே சென்னையில் வைத்திருந்த குறிப்புக்களை எல்லாம் எடுத்து வரும்படியாகத் தம் குமாரரை அனுப்பினர். அவரும் அப்படியே புறப்பட்டார்.