பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுதிக்காலம் 209.

டாக்டரும் கவலை இல்லாமல் போய் வரலாம்; அப்படி ஒன்றும் அபாயம் இல்லை. என்று சொன்னதால் கிளம்பிச் சென்னைக்குச் சென்ருர்,

அப்போது ஆசிரியப் பெருமானுக்கு அருகில் அவருடைய கொள்ளுப்பேரன் சங்கரனும், ஆசிரியரிடம் பாடம் கேட்ட வேணுகோபாலனும் அல்லது வேறு ஒருவரும் இல்லை.

நான் என்னுடைய குடும்பத்தை மோசூரில் வைத்திருந்தேன். என் தந்தையாருக்கு உடம்பு சரியில்லே என்று கடிதம் வந்ததால் நான் மோசூருக்குப் போவதற்கு முன்பு திருக்கழுக்குன்றம் சென்றேன். ஆசிரியப் பெருமானப் பார்த்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

கையைக் கொடு'

கம்பராமாயணத்தையும், தேவாரத்தையும் நல்ல முறையில் அச்சிட வேண்டுமென்ற ஆசை ஆசிரியருக்கு இருந்தது. அந்த இரண்டையும் நல்ல முறையில் அச்சிட, நீ உடன் இருந்து உதவி செய்வாயா? கையைக் கொடு என்ருர்.

அந்தத் திருக்கரத்தைப் பரிசிக்கும் பேறு, அதுதான் கடைசியாக இருக்கும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அந்தக் திருக் கரத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். தேவாரத்தையும், கம்பராமாயணத்தையும் நல்ல முறையில் வெளியிடவேண்டுமென்ற ஆவல் அவரிடம் எந்த அளவுக்கு இருந்தது என்பது எனக்கு நன்முகத் தெரிந்தது. அவரிடம் விடை பெற்றுக்கொண்டு என் தந்தையாரைத் காண் நான் மோசூர் சென்றேன். f .

என் தந்தையார் பிரிவு மோசூருக்குப் போனபோது என் தந்தையார் மிகவும் அபாய கரமான நிலைமையில் இருந்தார். மறுநாள் இறந்துபோனுர், அதளுல் அங்கேயே தங்கிவிட்டேன். போனவுடன் என்னுடைய நிலைபற்றி ஆசிரியர்பெருமானுக்கு எழுதி இருந்தேன். உடல் ஜுரத்தோடு என் கடிதத்தைப் பார்த்துப் பார்த்து, தனியாக அவன் என்ன செய்வாளுே?’ என்று வருந்தினர்களாம்.

இறுதிக்காலம் உடல் சுரம் அதிகமாகி வருவதைக் கண்டு, அவருடைய

குமாரருக்குத் தந்தி கொடுத்தார்களாம். அவர் வருவதற்குள்

2604ー互4