பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210. என் ஆசிரியப்பிரான்

ஆசிரியப்பெருமான் தம் வாழ்வை முடித்துக்கொண்டார். அவரது இறுதிக் காலத்தில் அவருடன் நாம் இருக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கும், அவருடைய குமாரருக்கும் இருந்தது.

இரங்கற் செய்திகள்

ஆசிரியப்பெருமான் இறைவன் திருவடியை அடைந்த செய்தியை அறிந்து தமிழுலகமே மிக்க துயரத்தில் ஆழ்ந்தது. பலர் ஆசிரியப்பெருமானின் இளவலுக்கும் குமாரருக்கும் இரங்கற் கடிதங்களையும் இரங்கற் பாடல்களையும் எழுதியனுப்பி ஞர்கள். சபைகள் இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றின, பத்திரிகைகள் ஆசிரியரின் மறைவைப் பற்றி வருந்தி எழுதின. அவ்வாறு வந்தவற்றில் சில வருமாறு:

திரு டி. கே. சிதம்பரநாத முதலியார் :-தமிழ் என்ருல் தங்கள் தந்தையார், தங்கள் தந்தையார் என்ருல் தமிழ் என்று சொல் லும்படி இருந்தது, அவர்களது தமிழ் ஈடுபாடு. தமிழின் உயர்வைப் பற்றியும் அதன் வளர்ச்சியைப் பற்றியும் சதா பாவனை செய்த வண்ணம் இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த உலகம் தனியான உலகம் என்ருல் மிகை அல்ல. அதுதானே புலமை: தமிழுக்குத் தொண்டு செய்யவே பிறந்தார்கள். அருமையான தொண்டுகளையும் செய்து முடித்தார்கள். அவர்கள் செய்தது தனிமையான தொண்டு, இனி யார் இந்த விதம் செய்யப் போகிரு.ர்கள்.

ஐயரவர்கள் மறைந்த சமயத்தில் நான் உடன் இருக்க முடி யாமற் போயிற்று என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். என் தந்தையார் மோசூரில் காலமானர்கள். இரண்டு நாள் கிரியைகளை முடித்துக் கொண்டு எங்கள் ஊராகிய மோகனூர் சென்றேன். அங்கே தொடர்ந்து கிரியைகளைச் செய்து வந்தேன். அப்போது ஆசிரியப் பிரான் மறைந்த செய்தியை அறிவிக்கும் தந்தி வந்தது. நான் பதறிப் போனேன். துடிதுடித்தேன், புலம்பினேன். ஆசிரியப்பெருமான் குமாரருக்கு 30-4-1942 அன்று ஒரு கடிதம் எழுதினேன். அதில், இந்த சமயத்தில் அங்கே இல்லாத மகா பாவியாகி விட்டேனே என்று அழுது புலம்புகிறேன். போன செவ்வாயன்று அவர்களிடம் விடை பெற்ற போது அது இறுதி விடையென்று நான் சிறிதும் அறிந்து கொள்ளவில்லையே! நேற்றுத் தந்தி கிடைத்தவுடன் புறப்பட்டு வராத நிலையில், சிறைப்பட்ட வனைப் போல இருக்கிறேனே! ஐயோ! இப்படியும் ஒரு காலம் வந்ததே! எனக்குப் பிரதியட்ச தெய்வமாக இருந்த அவர்களை இனி எங்கே போய்த் தேடிக் காண்பேன்? திருக்கிழுக்குன்றத்துக்குப் புறப்படுகையில் கணக்கிலத் திருக்கோலம் நீ வந்து காட்டினய் கழுக்குன்றிலே’ என்று சொல்லிக் கண்ணிர் விட்டார்க்ளே! அப்பொழுதே இறைவன் திருவருட் குறிப்பை அவர்கள் தெரிந்து கொண்டார்களோ?