பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுதிக்காலம் 2 11

3-5-1922 அன்றும் ஒரு கடிதம் எழுதினேன்; முதல் வாரம் செவ்வாய்க்கிழமை விடை பெற்றபோது அடுத்த சனிக்கிழமை வருவதாகச் சொல்லி வந்தேன். என் தலைவிதி அதனை நிறைவேற்ற முடியாமற் செய்து விட்டது. இங்கே நாளைத் தசாஸ்து. வியாழக் கிழமை சுபஸ்வீகரணம். அன்று மாலையே புறப்பட்டுத் திருக்கழுக் குன்றம் வரலாமென்றிருக்கிறேன். இரண்டு கன்றினுக் கிரங்குமோர் ஆவென இருந்து மறுகிக் கொண்டிருக்கிறேன். என் உள்ளம் முழுவதும் அங்கேதான் இருக்கிறது. மறுபடியும் 6-5-42 அன்று மற்ருெரு கடிதம் எழுதினேன். என் தந்தையாரின் மரண சமயத்தில் அருகில் இருக்கும்படி கூட்டி வைத்த தெய்வம் ரீமத் ஐயரவர்களுக்கு அருகில் இராமல் விலக்கி வைத்துவிட்டது. இதைக் காட்டிலும் இடிவூழ் வேறு இருக்கப் போவதில்லை, வெள்ளிக் கிழமை புறப்பட்டுச் சனிக்கிழமையன்று அங்கே வந்துசேர எண்ணி .யிருக்கிறேன்' என்று அதில் எழுதினேன்.

யாழ்ப்பாணத்தில் இருந்த சு. நவநீதகிருஷ்ணபாரதி 28 இரங்கற் பாடல்களை எழுதி அனுப்பினர். அவற்றிற் சில :

  • சந்தமறைக் குலக்கொழுந்தே, நூலுழவ, கலையரசே,

சாமி நாதா,

மைந்தர்களை இனத்தவரை மனைமுதலாம் பலபொருளை

மற்றும் உள்ள

சிந்தைகிரம் பண்பினரைத் தீர்த்தத்தை ஆலயத்தைத்

தீர்ந்தா யேனும்

நந்தலிலாத் தமிழேட்டுச் சுவடிகளை கயவாது

நடந்த தென்னே!'

  • காணுத நூல்களைக் கண்டெடுக்க வல்லார்யார்?

கண்டெ டுத்தும்

மாளுத பாடமறிக் தொதுக்கவல்லார் இனியாவர்?

மற்றந் நூலின்

கோளுத கருத்தையறிந் துரைஇயற்றி எங்களுக்குக்

கொடுப்பார் யாவர்?

வாளுளைத் தமிழ்க்களித்து வருசாமி நாத எங்கு

மறைந்தாய் நீயே?’

"ØF Suzir GGIrapá flÅLitrifuaif” (Indian Social Reformer) என்ற ஆங்கிலப் பத்திரிகையில் சிதம்பரத்தில் இருந்த எஸ். ஆர். பாலசுப்பிரமணிய ஐயர் ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருந்தார். அதில் ஆசிரியப் பிரான் வரலாறு முழுவதுமே இருந்தது. அதில்,