பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 + 2 என் ஆசிரியப்பிரான்

"டாக்டர் சாமிநாதையருடைய மறைவு ஒரு காலக் கட்டத்தின் முடிவைத் தெரிவிக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் அவருடைய காலத்தை, சாமிநாதையர் காலம்’ என்று நன்கு எடுத்துச் சொல்ல லாம்...அவருக்குரிய பெருமையுள்ளபடி நினைவுச் சின்னத்தை எழுப் பினலும் எழுப்பாவிட்டாலும் தமிழ் இருக்கும் வரையில் அவருடைய பெயர் விளங்கும்' என்று எழுதினர். பொதிய ம&லப் பிறந்த தமிழ் வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில், துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே' என்று பாரதியார் பாடியது இங்கே நினைவுக்கு

வருகிறது.