பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. பண்பு நலங்கள்

நெடிய உருவம், சாந்தமான பார்வை, சிறிய தொந்தி, மெத்தென்ற நடை, இன்சொல், எப்போதும் தமிழைப் பற்றிய பேச்சு, தூய பஞ்சகச்ச வேட்டி-இதுதான் ஆசிரியப்பெருமான் வடிவம். யார் பார்த்தாலும் இவர் ஒரு பெரியவர் என்று எண்ணும் வகையில் அவர் தோற்றம் இருக்கும்.

சங்க நூல்கள் முதல் சிறிய பதிகம் வரையில் அவர் தமிழ்த் தாயின் அணிகலமாக எண்ணி ஆராய்ந்தார். எல்லாவற்றிலும் முழுக்கவனத்தைச் செலுத்தினர். உணவில் சோறு, குழம்பு, காய்கறி, கூட்டு, ரசம், பட்சணங்கள் என்று பலவகை உள்ளன என்ருலும் சோறே தலைமையான உணவு. அதற்கு வியஞ்சன மாகவே மற்றவை உதவுகின்றன. அவ்வாறே சங்கநூல்கள், தேவாரம், கம்பராமாயணம், என்பவற்றை ஆழ்ந்து பயில்வார். ஒரு பதிகமானலும் அதில் உள்ள சில நயங்களை உணர்ந்து இன்புறுவார். சங்கநூல்களில் முழுகித் திளைத்த அவருடைய உள்ளம் திரிபுக யமக அந்தாதிகளையும் ஆராய்வதில் தளர்ச்சி அடைவதில்லை. தமிழ் என்று எதுவாக இருந்தாலும் அதை ஆராயும் ஆர்வம் அவருக்கு என்றும் தணிந்ததில்லை.

அவருக்குத் தமிழ் ஒன்றே தெரியும் என்ருலும் வடமொழி, ஆங்கிலம், தெலுங்கு முதலிய மொழிகளிலுள்ள விஷயங்களே வல்லவர்வாய்க் கேட்டு அறிவதில் அவர் ஒரு சிறந்த மாளுக்க ராகவே இருந்தார். பெரும் பேராசிரியர் என்னும் பொருளே யுடைய மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்ற காலத்திலும் அவர் சிறந்த மாளுக்கராகவும் இருந்தார். தாம் அறியாத கருத்தை ஒரு சிறுவன் சொன்னலும் ஏற்றுக் கொண்டு பாராட்டுவார். அதில் பயனுள்ளவற்றைத் தம் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வார். 'காக்கை வாயினும் சொற் கொள்வரால்' என்பது அவருக்கு முற்றும் பொருத்தமானது. .

ஒருவரை அணுகி அவருக்குத் தெரிந்தவற்றை உசாவி அறியும் போது அவற்றைப் பொறுமையோடு கேட்பார். சம்பந்தம்