பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 4 என் ஆசிரியப்பிரான்

இல்லாத பல செய்திகளை அவர் கூறிலுைம் அவற்றைப் புறக்கணிக் காமல் குறித்துக் கொள்வார். அவை அத்தனையும் பயன்படும் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏதேனும் ஒன்று பயனுள்ள தாக இருந்தால் போதும் என்பது அவர் எண்ணம். அதனல் பயன் இல்லாத பலவற்றை அவர் சொன்னலும் அவற்றை அலட்சியம் செய்யாமல் கேட்பார். அலட்சியம் செய்தால் அவருடைய ஊக்கம் குறைந்து விடுமென்றும் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லாமல், இருந்து விடக்கூடும் என்றும் கருதுவார்.

அவருடைய உழைப்பையும் பொறுமையையும் அளவிட்டுச் சொல்லமுடியாது. ஒரு செய்யுளுக்கு எளிதில் பொருள் விளங்கா விட்டால் அதனை அறியும் வரையில் திருப்பித் திருப்பிப் படித்துச் சிந்திப்பார். ஒர் அரிய கருத்துப் புலப்பட்டுவிட்டால் தம்முடைய தோளைத் தாமே தட்டிக் கொள்வார். -

அவருடைய பேருழைப்புக்கு அடுத்தபடி அவருடைய நன்றி யறிவைச் சொல்ல வேண்டும். ஒருவர் சிறிய உபகாரம் செய்தாலும் அதை மறவாமல் பாராட்டுவார். அவர் எழுதிய என் சரித்திரத்"தில் இத்தகைய நிகழ்ச்சிகள் பலவற்றைக் காணலாம்.

அவருடைய ஆராய்ச்சிக்கு உட்பட்டவையாவும் மிகச் சிறந்த நூல்களாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை; என்ருலும் தமிழ் என்பதற்காக அவற்றிலும் தம் உள்ளத்தைச் செலுத்தி ஆராய் வார். அருமையான சங்க நூல்களை ஆராய்ந்து பதிப்பித்த அவர் பல சிறிய பிரபந்தங்களேயும் வெளியிட்டிருக்கிரு.ர். அவற்றிலும் குறிப்புரைகள், பாட பேதங்கள், ஆராய்ச்சிப் பண்புடைய முகவுரை, அகராதி யாவும் இருக்கும். அவருடைய பதிப்புக்களில் உள்ள அகராதிகளைத் தொகுத்தாலே பேரகராதியாக விளங்கும்.

முகவுரையில் நூலின் இயல்பு, அதில் உள்ள சிறப்புக்கள், அதன் மூலச்சுவடி கிடைத்த வரலாறு, அதை ஆராயும்போதும் பதிப்பிக்கும். போதும் உடனிருந்து துணை செய்தவர்களின் பெயர்கள் இவற்றை எடுத்துக் காட்டுவார். அவர்களை மனமாரப் புகழ்வார். இளமை முதல் தமிழ்த் தொண்டிலே பொழுது போக்கி வரும் எனக்குச் சில: வருஷங்களாக உள்ள முதுமைத் தளர்ச்சியால் நான் எண்ணிய வற்றை எண்ணியபடியே என்னல் செய்ய முயலவில்லை. ஆயினும், சுவையுள்ள தமிழ் நூல்கள் வெளிவர வேண்டும் என்னும் ஆவல் மட்டும் இருந்து வருகிறது. இந்நிலைமையில் இப்பதிப்பு விஷயத்தில் என் கருத்தையும் குறிப்பையும் தெளிந்து உதவி