பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு நலங்கள் 21 5

புரிந்தவர் மேற்கூறிய ஜகந்நாதையர். அவருடைய பேருழைப்பே இப்பதிப்பிலுள்ள ஆராய்ச்சியும் குறிப்புரையும் இம்முறையில் அமைந்திருப்பதற்குக் காரணம் என்பதை இதன் மூலமாகத் தமிழன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குமர குருபர சுவாமிகள் பிரபந்தங்கள்’ என்னும் நூலின் முகவுரையில் எளியேனேப் பற்றி எழுதியிருக்கிருர், ஈதல் அரிதெனினும் இன் சொலினும் நல்கூர்தல், ஒ ஓ பெரிது கொடிதம்மா' என்று குமர குருபரர் சொல்வார். அதனைத் தம் எழுத்திலும் சொல்லிலும் லோபமின்றி அவர் வெளிப்படுத்தும் இயல்பை எவ்வளவு பாராட் டிலுைம் தகும். இராம பிரான் அணை கட்டும்போது ஒர் அணில் தன் மேலுள்ள மணலை அந்த அணையில் உதறியதை அப்பெருமான் பாராட்டி அதைத் தடவிக் கொடுத்தாரென்றும், அதனல் அணிலின் முதுகில் கோடுகள் உள்ளன என்றும் சொல்வார்கள். இது புராணக்கதை. ஆனல் ஆசிரியப்பிரான் பிரத்தியட்சமாக இத்தகைய செயலைச் செய்தது எத்தனை பெருந்தன்மை பெரிய மலை ஒரு சிறிய மணல் துகளைப் பாராட்டியது போன்ற செயல் அல்லவா இது?

தமிழை அரை குறையாகப் படித்தவர் தம்பால் வந்தால் அவரோடு பேசி, அவருடைய குறைபாடுகளே உணர்ந்தாலும் அவற்றைச் சுட்டிக் காட்டிக் கண்டிக்கமாட்டார். 'உனக்குள்ள தமிழன்பு சிறந்தது. ஒரளவு படித்திருக்கிருய். கற்றவர்களே அணுகி இன்னும் நன்ருகப் படித்தால் நீ பெரிய புலவன் ஆவாய்' என்று ஊக்கம் அளிப்பார். இன்ன முறையில் கற்க வேண்டும் என்றும் சொல்வார்.

ஆனல் யாரேனும் தாம் மிகப் படித்தவராக எண்ணிக் கொண்டு வந்தாலும் அவர்களைச் சில கேள்விகள் கேட்டு மடக்குவார். அவர் தம் கர்வம் அடங்கிச் செல்வார்.

பழைய நூல் எதுவானுலும் அதன்பால் மதிப்பு வைத்து வெளியிடுவார். அதில் பிழையிருந்தாலும் பொருட்படுத்தாமல் வெளியிடுவார், பழைய தமிழ் நூல்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அவர் பதிப்பித்த் சிவசிவ வெண்பா' என்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்த நூலின் வெண்பாக்கள் சிலவற்றில் வெண்டளே தவறி யிருக்கும் என்ருலும் அது பழைய நூல் என்பதல்ை அதனை வெளி யிட்டார். அதன் முகவுரையில் அந்தப் பிழையை எடுத்துக் காட்டினர்.