பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 6 என் ஆசிரியப்பிரான்

எந்த நூலானலும் அவர் கைபட்டால் அது தனி மெருகுடன் விளங்கும். அழகர் கிள்ளை விடுதூது’ என்ற நூலை முன்பே ஒருவர் பதிப்பித்திருந்தார். பெருக்கல் வாய்பாடு போல அதன் தோற்றம் இருந்தது. ஆசிரியப்பிரான் அதைப் பதிப்பித்திருக் கிறார். அதையும் பிறர் பதிப்பித்த நூலையும் பார்க்கும்போது அஜ கஜாந்தரமாகத் தோன்றும். மற்ற நூல்களின் அமைப்பைப் போலவே குறிப்புரையையும் விரிவான முன்னுரையையும் இணைத்து அதை வெளியிட்டார். மகரநெடுங் குழைக் காதர் பாமாலை" என்பது ஒரு நூல். அதுவும் முன்பே ஒருவரால் பதிப்பிக்கப் பெற்றது. அதை ஆசிரியப் பிரான் பதிப்பித்தார். வழக்கம் போலக் குறிப்புரையையும், அந்த நூல் தோன்றிய சுவையான வரலாற்றையும் அந்தப் பதிப்பில் காணலாம். அவர் கைபட்ட எதுவும் தனிச் சிறப்புடன் விளங்கும் என்பதை அவர் வெளியிட்ட சிறு பிரபந்தங்களைக் கண்டு அறியலாம்.

"இவ்வளவு காரியம் செய்து விட்டோம்!” என்ற திருப்தி அவருக்கு என்றுமே இருந்ததில்லை. எல்லா நூல்களையும் பதிப் பிக்கும் பேரார்வம் இருந்தது. தமிழ் மக்கள் அவர் கைப்பட எல்லா நூல்களும் வெளிவர வேண்டுமென்ற விரும்பினர்கள். 88 ஆண்டு வாழ்ந்த அவர் இருபத்தைந்தாவது பிராயம் தொடங்கி இடைவிடாமல் உழைத்தும் ஆராய்ந்தும் செய்த அற்புதத் திருத்தொண்டு, 'ஒருவரா இவ்வளவையும் செய்தார்?' என்று வியப்பில் ஆழ்த்தும், பிற்காலத்தில் இதை நம்பாமல், யார் யாரோ செய்தவற்றை அவர் பேரால் வெளியிட்டிருக்கிருர்கள்’ என்று சொல்லவும் கூடும். "நாம் இதுவரையில் உண்ட உணவை எண்ணிப் பாருங்கள். ஒர் அன்ன மலையாகவே அவை இருக்கும். எதையும் இடைவிடாமல் தளர்ச்சியின்றிச் செய்தால் மலைகளைப் படைப்பது போன்ற செயல்களைச் செய்ய முடியும்” என்று அவர் சொல்வார்.

அடிக்கடி அவரைப் பல ஊர்களிலுள்ள சபையினர்கள் தலைமை தாங்கிச் சிறப்பிக்க அழைப்பார்கள். சிலவற்றை ஒப்புக் கொண்டு போய்ச் சிறப்பித்து வருவார். அழைக்கும் இடங்களுக்கெல்லாம் போனல் தம் தமிழ்ப்பணி தடைப்படும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்,

அவிநாசியில் இருந்த கருணும்பிகை சபை என்ற சபைக்கு ஒரு முறை சென்று தலைமை தாங்கினர். அடுத்த ஆண்டும் வந்து சிறப்பிக்க வேண்டுமென்று சபையினர் வற்புறுத்தினர். அதனல் இரண்டாவது முறையும் அங்கே சென்று சிறப்பித்தார். அந்த