பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு நலங்கள் 217

ஊரில் ஒரு பத்திரிகையை நடத்திய ஒருவர் பொருமை மிகுதி பினல், 'இவரைத் தவிர வேறு புலவர்கள் தமிழ்நாட்டில் இல்லையா? இவரையே ஏன் அழைக்க வேண்டும்?” என்று தம் பத்திரிகையில் எழுதினர். அதைக் கண்டு ஆசிரியர் வருந்தினர். சில நாட்கள் கழித்து அவிநாசியிலிருந்து ஆசிரியருக்கு ஒரு கடிதம் வந்தது. "தங்களைக் குறை கூறி எழுதியவர் தம் கை புழுத்து நோய்வாய்ப் பட்டு இறந்து போளுர்’ என்று ஒருவர் எழுதியிருந்தார். அதைக் கண்டு ஆசிரியர், குறை கூறுவது சிலர் இயல்பு. அதனல் அவரிடம் நல்ல குணங்கள் இரா என்று சொல்ல முடியாது. பாவம் அவர் இறந்தது பெரிய துர்ப்பாக்கியம்' என்று வருந்தினர். தம்மை அவமதிப்போரையும் தமக்குத் தீங்கு இழைக்க முயல்பவர்களேயும் அவர் வெறுப்பதில்லை. என்னுடைய வினைப்பயனே இப்படி முடிந்தது' என்று வருந்துவது அவர் வழக்கம் பொருமையினல் யாரேனும் எழுதினல் அதைப் பொருட்படுத்துவது இல்லை. அதற்கு ஒர் உதாரணம் என் நினைவுக்கு வருகிறது.

ஒரு முறை ஒருவர் ஆசிரியரைக் குறை கூறி எழுதியிருந்தார். அவர் கூறியதற்கு ஒரு பதில் எழுதி அதைக் கும்பகோணம் கல்லூரியில் இருந்த சாது சேஷையர் என்ற பேராசிரியரிடம் காட்டினர். அவர் அதை உடனே கிழித்துப் போட்டுவிட்டு, 'உலகத்தில் தாம் நல்ல காரியங்களைச் செய்ய முடியாவிட்டாலும் நல்லது செய்தவர்களைக் குறை கூறுவோர் பலர் இருக்கிருர்கள் அவர்களுக்குப் பதில் எழுதுவதனால் தமிழ்த் தொண்டுக்காக நீங்கள் செலவிடும் காலம் வீணுகும். ஆகையால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் உங்கள் வேலையைச் செய்து வரவேண்டும்' என்ருர், அதைப் பொன்னேபோல் போற்றித் தம்மைக் குறை கூறும் கண்டனங்களுக்குப் பதில் எழுதுவதைச் செய்யாமல் தம் பணியைத் தொடர்ந்து நடத்தினர். பல சமயங்களில் அவ்வாறு குறை கூறியவர்கள் பிறகு மனம் திருந்தித் தாம் செய்ததற்கு மனம் வருந்தி ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டதும் உண்டு.

ஆசிரியருக்கு உளுந்து சம்பந்தமான பண்டங்களில் விருப்பம் அதிகம். திருப்பதித் திருமால் வடை கடினமாக இருக்கும். அதைக் கடித்துத் தின்று சுவைப்பார். மிளகு வடையில் அவருக்கு விருப்பம் உண்டு. இவ்வாறு கடினமான பண்டங்களைக் கடித்துத் தின்பதல்ை அவருடைய பற்கள் இறுதி வரையில் உறுதியாக இருந்தன. அவருடைய பற்களிலும் உறுதியிருக்கும்; சொற்களிலும் உறுதி .யிருக்கும்;

தம்முடைய நூல்களுக்குச் சிறப்புரை தரவேண்டுமென்றும், முகவுரை தரவேண்டும் என்றும் பலர் எழுதுவார்கள். அப்படி