பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட புத்தகம் எழுத மறுத்தது 1 F

எல்லாம் அச்சிட வேண்டுமென்ற உயர்ந்த கருத்தை நான் மறந்து விடும்படி நேரிடலாம். நானும் மனிதன்தானே? தயை செய்து தாங்கள் இதை என்னே ஏற்கும்படி வற்புறுத்த வேண்டாம். என்னே என்னுடைய பழைய சுவடியோடு இருக்கும்படி விட்டுவிடுங்கள். தாங்கள் சொல்வதை நான் அவமதிப்பதாக நினைக்கக்கூடாது.

பழைய நூல்களின் ஆராய்ச்சிக்கு எத்தனை நேரம் இருந்தாலும் போதாது. இந்த நாட்டில் தோன்றிய பழைய நூல்கள் எத்தனையோ இன்னமும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு நூலே ஆராய்கிறபோது

அதன் உரையில் குறிப்பிடப்பெற்றிருக்கும் வேறு பல நூல்கள் கண்

ல்ை பார்ப்பதற்குக்கூடக் கிடைக்கவில்லையே என்ற துக்கம் என்ன

வாட்டுகிறது. கிடைப்பனவற்றை நல்ல முறையில் அச்சிட்டுவிட

வேண்டும் என்று இருக்கிறேன். ஆண்டவன் எனக்கு அனுகூல

மாகவும் இருக்கிருன். இந்தத் தொண்டுக்குத் தடைவராமல் இருக்கத் தாங்களும் என்ன ஆசீர்வாதம் செய்யுங்கள். இதைவிடப் பெரிய

காரியங்கள் உலகத்தில் இருக்கலாம். ஆனல் இதுதான் எல்லா

வற்றையும் விடச் சிறந்த பணியாக எனக்குத் தோன்றுகிறது.'

என்று சொன்னர்.

ராவ்பகதூர் நாகோஜிராவ், இத்த மனிதருக்குப் பணத்தில் ஆசை இல்லையே! பழஞ்சுவடிகளை வெளிக்கொண்டுவர வேண்டு மென்றுதான் எத்தனை ஆசை! இப்படியும் ஒரு மனிதரா?' என்று. மனத்திற்குள் நினைத்திருப்பார்.

சின்னசாமி ஐயர்

ஆசிரியருடைய தந்தையாரின் இளவல் ஒருவர் இருந்தார். அவருக்குச் சின்னசாமி ஐயர் என்று பெயர். ஆசிரியர் தந்தை வேங்கடசுப்பையராகிய பெரியசாமிக்குத் தம்பி. ஆதலால் சின்னசாமி என்ற பெயர் இவருக்குப் பொருத்தமானது என்று சிலர் சொல்வார்கள். ஆசிரியப் பிரானுடைய தந்தையார் நல்ல சங்கீத வித்துவான். பல பெரியோர்களின் கீர்த்தனங்களை நன்ருகப் பாடுவார். அப்பொழுதெல்லாம் சின்னசாமி ஐயரும் உடன் பாடுவார்; பின்பாட்டும் பாடுவதுண்டு.

அவரிடத்தில் ஆசிரியப்பிரானுக்கு மிகுதியான அன்பு உண்டு. தம் தந்தையாருடன் பயபக்தியுடன் பழகும் ஆசிரியர் சின்னசாமி ஐயருடன், 'சிற்றப்பா, சிற்றப்பா!' என்று சகஜமாகப் பழகுவார்.

சின்னசாமி ஐயருக்குக் குழந்தைகள் இல்லை. ஆதலால்: ஆசிரியப் பெருமானிடம் அவருக்கு நிரம்பிய பாசம் இருந்தது. 1898-ஆம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கு அறுபது பிராயம் நிறைந்து சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றது. ஆசிரியப்பிரான் தாமே முன்