பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 என் ஆசிரியப்பிரான்

வரும் எல்லா நூல்களும் சிறந்தனவாக இருக்கும் என்று சொல்ல. முடியாது. அத்தகைய நூல்களுக்கும் தம் கருத்தை எழுதுவார். "இந்த நூலை இயற்றியவர் மிகவும் ஆர்வத்துடன் எழுதியிருக்கிரு.ர். அது போற்றுவதற்குரியது. இவர் நினைத்த பயன் கிடைக்க வேண்டும். இதைவிடச் சிறந்த நூல்களே இவர் எழுத வேண்டு. மென்று வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிடுவார். நூலை எழுதியவர் உவகையடைவார். புத்தகம் சிறப்புடையது என்று: எழுதவில்லையே என்ற எண்ணமே அவருக்கு உண்டாகாது.

மாளுக்கர்களுக்குப் பாடம் சொல்லும்போது அவர் படிக்கும். முறையிலிருந்தே அவர்கள் தகுதியை அறிந்து சொல்லுவார். சிலருக்கு விளக்கமாகச் சொல்வார்; இடையிடையே தம் அநுபவங்களை எடுத்துரைப்பார். சிறிய சிறிய கதைகளைச் சொல்லி இன்பமுட்டுவார். அவற்றை ஊறுகாய்க் கதைகள் என்பார். உணவை உண்பதற்கு ஊறுகாய் பயன்படுவது போல அவை பயன் படும். பெரும்பாலும் நகைச்சுவை நிரம்பியதாக இருக்கும். ஓர் உதாரணம் சொல்கிறேன்.

நான் வீதி வழியே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் நிறுத்தினர். என்னே ஏற்றிக் கொண்டு நான் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டுபோய் விடுவார் என்று நினைத்தேன். அவர், நீங்களா? இன்னும் இருக்கிறீர்களா? நமஸ்காரம் என்று சொல்லிக் காரை ஒட்டிக் கொண்டு போய் விட்டார். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகளைத் தம் அநுபவத்தில் உணர்ந்து அவற்றை எடுத்துக் கூறி நகைப்பார்.

தாம் கண்டறிந்த பெரியவர்களுடைய வரலாற்றை நினைவில் வைத்துக் கொண்டு, பாடம் சொல்லும்போது அவர்களைப் பற்றிச் சொல்வார். தேதியூர் மகாதேவசிவன் என்பவர் பல தலங்களுக்கும். சென்று அத்தலங்களைப் பற்றிய செய்திகளை எழுதி வைத்திருந்தார். அவற்றையெல்லாம் வாங்கி வைத்து வேண்டும்போது உரிய வற்றைப் பயன்படுத்திக் கொண்டார். 'சிறு துரும்பும் பல்லுக். குத்த உதவும்' என்றபடி அவர் எந்தச் சிறிய செய்தியையும் புறக் கணிக்காமல் குறித்து வைத்துக் கொள்வார்.

முத்துப்பிள்ளையென்ற ஒருவர் சலவையாளர் வகுப்பில் தோன்றினவர். அவரை வண்ணுரப் பரதேசி என்றும் சொல் வார்கள். ஒரு முறை ஆசிரியர் திருவிடை மருதுாரில் அவரைச் சந்தித்தார். "ஐயா! உங்களைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆவல் கொண்டிருக்கிறேன். நீங்கள் பல தலங்களுக்குச்