பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு கலங்கள் 219,

சென்று அந்தத் தலங்களின் சிறப்பை அறிந்தவர்கள் என்று கேள்வி யுற்றேன். தயை செய்து அவற்றைச் சொல்ல வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார். அவரும் சில செய்திகளைச் சொல்ல அவற்றையெல்லாம் குறித்துக் கொண்டார். இப்படித் தலங்களைப் பற்றிச் சேர்த்த குறிப்புக்களுக்கு அளவில்லை, ஒவ்வொரு நாளும் காலேயில் வேலையைத் தொடங்கும்போது தேவாரத்தில் ஒரு பதிகமாவது பாராயணம் செய்வார்; அல்லது தம் மாளுக்கர் களில் ஒருவரைப் படிக்கக் கேட்டு இன்புறுவார். அப்போது அவற்றிலுள்ள நயங்களைச் சொல்வார்.

தாம் படிக்கும் நூலில் அங்கங்கே அடையாளம் இட்டிருப்பார்.

தம் மாளுக்கர்களையும் அவ்வாறு செய்யும்படி சொல்வார். ஒரு

பாட்டின் அடியின் ஏதேனும் சிறப்பு இருந்தால் அதன்முன் ஒரு

புள்ளியிட்டிருப்பார். எத்தனை சிறப்புக்கள் உண்டோ அவ்வளவு: புள்ளிகள் இருக்கும். சந்தேகமான இடங்களுக்கு முன் சிறுகோடு (-) இட்டிருப்பார். பாடம் செய்வதற்குரிய அரிய பாடல்களானல் அவற்றிற்கு முன் ஒரு சுழி (0) இட்டு வைப்பார். அவர் கைப்பட்ட புத்தகத்திலும் அவருடைய குறியீடுகள் இல்லாமல் இரா. போர் முனையில் சென்று போரிட்ட வீரனுக்கு மார்பில் புண்கள் எவ்வாறு

வீரத்தைக் காட்டும் அடையாளங்களாக இருக்குமோ, அவ்வாறு அவர் படித்த நூல்களில் குறியீடுகள் அமைந்திருக்கும்.

அவருடைய பண்பு நலங்கள் யாவற்றையும் சொல்லிக் கொண்டே போகலாம். solo Gold (Personality) Grass gy இக்காலத்தில் சொல்கிருர்களே, அதை அவரைக் கண்ட மாத்திரத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

அவருடைய திருவவதாரத்தில் சங்க நூல்களும் பிறவும் இன்று அணி விளக்குப் போலத் திகழ்கின்றன. அவர் காலத்துக்கு முன் பல புலவர்கள் இருந்தாலும், அவருக்குக் கிடைக்காத ஏட்டுச் சுவடிகள் இருந்தாலும் அவை வெளியாகவில்லை. அவற்றைத் தேடித் துருவி ஆராய்ந்து கண்ணுடி போலப் பதிப்பிக்கும் வாய்ப்பு அவருக்குத்தான் கிடைத்தது. இறைவன் திருவருளும் அவருடைய சிறந்த அறிவாற்றலும், பொறுமையும் உழைப்புமே இதற்குக் காரணம், இனி யார் அப்படிப் பிறக்கப் போகிருர்கள்! வாராது வந்த மாமணியாக அவர் திகழ்ந்தார். தமிழுலகம் அவரை என்றும் மறவாது என்பது திண்ணம்.