பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 என் ஆசிரியப்பிரான்

நின்று அதை வைதிக முறைப்படி சிறப்பாக நடத்தினர். தமக்குப் பிள்ளையில்லையே என்ற வருத்தம் சின்னசாமி ஐயருக்கு அந்த நிகழ்ச்சி .யினல் அறவே மறந்து போயிற்று. உத்தமதானபுரத்தில் அவர் கிராம முன்சீபாக இருந்தார். பல பழைய கீர்த்தனைகளை அவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார்.

1901-ஆம் ஆண்டில் அவர் இறைவன் திருவடியை அடைந்தார். அவருக்குச் சந்ததி இல்லாமையால் ஆசிரியப் பெருமானே அவருடைய ஈமக்கடன்களைச் செய்து நிறைவேற்றினர். அவருடைய சிராத்தத்தையும் ஆண்டு தோறும் செய்து வந்தார். 1906-ஆம் ஆண்டு அவருடைய சிராத்த தினத்தன்றுதான் ஆசிரியப்பிரானுக்கு மகாமகோபாத்தியாயர் என்னும் பட்டம் கிடைத்தது.