பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மற்ற வேலைகளில் ஈடுபடாமை

ஆசிரியர் கல்லூரிக்குப் போய்விட்டு வந்த நேரங்களிலெல்லாம். பழைய நூல்களை ஆராய்ச்சி செய்வதிலும், அவற்றை வெளியிடு: வதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்வதிலும் ஈடுபட்டு வந்தார். அவை சம்பந்தமாகவே கனவுகள் கூடக் கண்டு வந்தார். அதனல் வேறு எத்தனை உயர்ந்த காரியமாக இருந்தாலும் அதில் அவரது உள்ளம் ஈடுபாடு கொள்ளவில்லை.

ஐயரவர்களுடைய கைவண்ணத்தால் செப்பம் .ெ ச ய் யப் பெற்ருல் தங்கள் நூலுக்குச் சிறப்பு உண்டாகும் என்று பலர் நினைத்தார்கள். ஆசிரியப்பிரான் எப்போதுமே ஏதாவது நூலா ராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிருர் என்பதை அவர்கள் நினைப்பதில்லை. அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணியில் இருந்த எஸ். எம். நடேச சாஸ்திரியார் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்து வந்தார். தாம் எழுதும் நூலில் தமிழ்ப் புலவர்கள் தவறு எதையும் காண இடமளித்துவிடக் கூடாது என்று நினைந்தார். அவருக்கு ஆசிரியப் பெருமானுடைய நினைவு வந்தது. ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினர். 'வால்மீகி இராமாயணத்தை எல்லோரும் வடமொழியில் படிப்பது எளிதன்று. அதை நான் தமிழில் மொழி பெயர்த்து வருகிறேன். வடமொழி தெரியாதவர்களும். இதன்மூலம் வால்மீகி இராமாயணத்தைத் தெரிந்துகொள்ள முடியும். எனினும் என்னுடைய மொழிபெயர்ப்பில் எத்தனையோ பிழைகள் இருக்கலாம். தாங்கள் என்பால் மிக்க அன்பு உடைய வர்கள். தாங்கள்தாம் இதை ஒருமுறை பார்த்து, இதிலுள்ள பிழைகளை நீக்கித் திருத்திக்கொடுக்க வேண்டும்' என்று எழுதினர்.

அந்தக் கடிதத்தைக் கண்ட ஆசிரியர் உடனே அதற்கு விடை எழுதினர். தாங்கள் மேற்கொண்ட காரியம் மிகவும் சிறந்தது. ஆனல் பழைய நூல்களே ஆராய்ச்சி செய்து பதிப்பதிலேயே எனக்கு, நேரம் சரியாகிவிடுகிறது. அதற்கே நேரம் போதவில்லை. தாங்கள் செய்திருக்கும் காரியம் மிகப் பெரியது என்ருலும், அதனை நான் பார்த்துத் திருத்திக் கொடுக்க நேரம் இல்லாமல் இருப்பதற்கு, வருந்துகிறேன். சென்னையிலே பெரும் புலவராக வை. மு. சடகோப இராமானுஜாசாரியார் இருக்கிருர். அவரைக் கொண்டு. திருத்திக்கொள்ளலாம்' என்று எழுதினர். நடேச சாஸ்திரியும்.