பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"14 என் ஆசிரியப்பிரான்

அதன்படியே செய்தார். அவரால் சடகோப இராமானுஜாசாரி யாருக்கு ஓரளவு ஊதியம் கிடைத்தது.

ஆசிரியர் நூலாராய்ச்சியையே தம் வேலேயாக வைத்துக் கொண்டதல்ை மற்ற விஷயங்களைக் கவனிப்பதில்லை. தம் குடும்ப விஷயத்திலும் அவர் ஈடுபடுவதில்லை. அவர் தந்தையார் இருந்த காலத்தில் அவர் அதைக் கவனித்துக் கொண்டார். பிறகு அவருடைய தம்பி திரு சுந்தரேசையர் பார்த்துக்கொண்டார். இறுதியில் ஆசிரியப் பிரானுடைய குமாரர் திரு. கல்யாணசுந்தரம் ஐயர் கவனித்து வந்தார். அதனல் ஆசிரியருடைய தமிழ்த் தொண்டு தடைபடாமல் நடந்து வந்தது.

போப்பின் பாராட்டு

அக்காலத்தில் ஜே. எம். நல்லசாமி பிள்ளை என்பவர் ஜில்லா முன்சீபாக நந்தியாலில் இருந்தார். அவர் சைவ சித்தாந்த நூல் களில் நல்ல பயிற்சி உடையவர். சைவத்தில் தீவிரப் பற்றுக்கொண்டு தமிழில் சித்தாந்த தீபிகை என்ற பத்திரிகையையும், ஆங்கிலத்தில் "லைட் ஆப் ட்ரூத்" (Light of Truth) என்ற மாதப் பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். அவருக்கு ஆசிரியப்பிரானிடம் பேரன்பு உண்டு. மணிமேகலையை ஆசிரியர் பதிப்பித்தவுடன், அவர் அதனை

விரிவாகப் பாராட்டி எழுதியிருக்கிரு.ர்.

அவரிடமிருந்து 1899-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் ஒரு கடிதம் வந்தது. ராயல் ஏஷியாடிக் ஜர்னலில், ஆசிரியப் பெருமானப் பாராட்டி ஜி. யு. போப் அவர்கள் எழுதியிருப்பதாக அந்தக்

கடிதத்தில் தெரிவித்தார். அதன் கருத்து இதுதான்.

'கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பேராசிரியராகவுள்ள சாமி நாதையர் புறநானூறு பதிப்பித்துள்ளார். இனித் தமிழ் நூல்களைப் பதிப்பிக்க விரும்புகிறவர்கள் எல்லோரும் அவரது பதிப்பு முறையைப் பின்பற்ற வேண்டும். அவர் வெளியிட்டுள்ள சிறந்த நூல்களில் இது 5-ஆவது ஆகும். மேல்நாட்டு அறிஞர்கள் இந்நூலை மதிப்பிடப் புகுந்தால், அவர்கள் இந்த வெளியீடுகளால் ஐயருடைய இலக்கிய ஞானத்தையும், அவர் எடுத்துக் கொண்ட பேருழைப் பையும் பாராட்டி, ஐரோப்பிய மேதாவிகள் கூட்டத்தில் ஒர் உயர்ந்த நிலையைப் பெறச் செய்வார்கள். ஐயர் அவர்களுடைய பதிப்புக்களால், தமிழ்மொழியானது எந்த மொழிக்கும் தாழ்ந்தது அல்ல என்பது நிரூபிக்கப்படுகிறது' என்று போப் எழுதியிருப்ப தாக அவர் குறிப்பிட்டிருந்தார். பழமையிலும் இலக்கிய வளத் திலும் எந்த மொழிக்கும் தமிழ் தாழ்ந்தது அல்ல என்பது உலகுக்கு எடுத்துக் காட்டப்பெறுகிறது' என்று நல்லசாமிப்பிள்ளை எழுதினர்.