பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பல பெருமக்களின் தொடர்பு

ஹாவ்லக் துரை

1898-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி கும்பகோணம் கல்லூரிக்கு அக்காலத்தில் சென்னை மாநிலக் கவர்னராக இருந்த ஹாவ்லக் (Haviock) பிரபு விஜயம் செய்தார். யாரேனும் பேரறிஞர்களோ அதிகாரிகளோ வந்தால் ஆங்கிலத்தில் வரவேற் பளிப்பார்கள். அக்காலத்தில் ஆங்கிலத்திற்குத்தான் மதிப்பு அதிகம். ஆளுல் கல்லூரி முதல்வராகிய நாகோஜி ராவ் ஆசிரியப் பெருமானுடைய பெருமையை அறிந்தவர் ஆதலால், அவரைக் கொண்டு தமிழிலும் ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்தளிக்க வேண்டுமென்று எண்ணினர். இது ஒரு புதுமையாக இருப்பதோடு கவர்னருக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்பது அவருடைய எண்ணம்.

கவர்னர் கல்லூரிக்கு விஜயம் செய்தபோது பல பெருமக்கள் வந்திருந்தார்கள். முதல்வர் நாகோஜிராவ் கவர்னரை ஆங்கிலத்தில் வரவேற்ருர். ஆங்கிலத்தில் ஒரு வரவேற்புப் பத்திரமும் வாசித் தளிக்கப் பெற்றது. அடுத்து ஆசிரியப் பெருமான் தாம் இயற்றிய தமிழ்ச் செய்யுளைப் படித்தார். அதன் மொழிபெயர்ப்பைக் கவர்னருக்கு எடுத்துச் சொன்னர்கள். ஆசிரியர் அதை இசையுடன் படித்தபோதே அதில் ஈடுபட்ட கவர்னர் அதன் பொருளே உணர்ந்த பிறகு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அங்கிருந்த பெருமக்கள் எல்லோரும் கவர்னர் பெருமானுடைய பெருமைக்கு ஏற்றபடி அந்த வரவேற்புப் பத்திரப் பாடல்கள் அமைந்திருந்தன என்று சொல்லி மகிழ்ந்தனர்.

டாக்டர் வில்ஸ்

கும்பகோணத்தில் அந்தக் காலத்தில் மெளனசுவாமிகள் என்ற ஒரு பெரியவர் இருந்தார். மடத்துத்தெருப் பக்கத்தில் ஒரு மடத்தில் அவர் இருந்தார். எந்த விதமான பேச்சும் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல் எல்லா வகையிலும் மெளனம் சாதித்த அந்தப் பெருமான உலகமே போற்றியது. ஆசிரியப்பிரானும் அவ்வப்போது சென்று அந்தச் சுவாமிகளைத் தரிசித்து வருவார். மெளனசுவாமிகளின் பெருமை நாடெங்கும் பரவியிருந்தது. அவரைத் தரிசிப்பதற்கு மேல்நாட்டிலிருந்தும் பலபேர் வருவார்கள்.