பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 என் ஆசிரியப்பிரான்

அவர் யாரிடமும் எதுவும் பேசுவது இல்லை. உட்கார்ந்தவர் உட்கார்ந்தபடியே இருப்பார். அவருக்கு ஏதாவது கொடுத்து உண்பிக்க வேண்டுமென்று பலர் விரும்புவார்கள்.

டாக்டர் வில்ஸ் என்பவர் கொழும்பிலிருந்து மெளன. சுவாமிகளைத் தரிசிக்க வந்தார். அவர் வருவதைக் கொழும்பில் இருந்த பொ. இராமநாதன் என்பவர் ஆசிரியருக்குத் தெரிவித்து மெளனசுவாமிகளைத் தரிசிக்க ஏற்பாடு செய்ய வேண்டுவென்று எழுதினர்.

டாக்டர் வில்ஸ் கும்பகோணம் வந்து ஆசிரியரைப் பார்த்து மெளனசுவாமிகளைப் பார்க்க வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவித்தார். திரு பொ. இராமநாதன் இதுபற்றித் தமக்கு முன்பே எழுதியதாகத் தெரிவித்து, அவரை மெளனசுவாமிகளிடம் அழைத்துச் சென்ருர்.

சுவாமிகள் என்ருல் காஷ்ாயம் தரித்துக் கொண்டு வந்தவர் களுடன் வேதாந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவார் என்று டாக்டர் வில்ஸ் நினைத்திருக்கலாம். ஆனல் சுவாமிகளைப் பார்த்தபோது அவருக்கு அளவிறந்த வியப்பு உண்டாயிற்று, கிடந்தது கிடந்த படியே வாய் பேசாமல் அவர் இருந்ததால், அப்படி ஒருவரால் எப்படி இருக்க முடியும் என்பதே டாக்டர் வில்ஸுக்கு வியப்பாக இருந்தது. புலன்களே வென்றவர்களுக்கு அப்படி இருக்க முடியும் என்றும் இந்தியாவில் அத்தகைய ஞானிகள் பலர் உண்டு என்றும் ஆசிரியர் தெரிவித்தார். கிடைத்தற்கரிய பேறு பெற்றதாக எண்ணி டாக்டர் வில்ஸ் மகிழ்ந்து ஆசிரியப் பெருமானுக்குத் தம்முடைய நன்றியைத் தெரிவித்தார்.

வரங்தருவார் பாரதம்'

'வரம் தருவார் பாரதம் பார்த்திருக்கிறீர்களா? தாங்கள் பல புத்தகங்களைப் பார்த்திருப்பீர்களே! தாங்கள் சேமித்து வைத்துள்ள நூல்களில் அந்தப் புத்தகம் இருக்கிறதா?' என்று ஒரு நண்பர் ஆசிரியரிடம் கேட்டார்.

கும்பகோணத்தில் ஆசிரியப்பிரான் இருந்தபோது, திருவா வடுதுறைக்கு விடுமுறை நாட்களில் போய்வருவது வழக்கமாகை யால் அன்று அங்கே போய் இருந்தார். அப்போது திருவாவடு துறை மடத்திற்குப் புதுச்சேரியிலிருந்து வந்த ஞானப் பிரகாச முதலியார் என்னும் கிறிஸ்தவ கனவான்தான் அப்படி ஆசிரியரிடம் கேட்டார்.