பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல பெருமக்களின் தொடர்பு 17

ஞானப்பிரகாச முதலியார் தமிழில் மிக்க அன்பு உடையவர். ஆயினும் அவர் கேட்ட கேள்வி ஆசிரியருக்கு வியப்பைத் தந்தது. அதை வெளிப்படக் காட்டிக் கொள்ளாமல், தான் வில்லிபுத்துரர் ஆழ்வாரின் பாரதம் படித்திருக்கிறேன். வில்லிபுத்தூர் ஆழ்வாரின் பிள்ளை பெயர் வரம் தருவார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். அவர் பாரதம் இயற்றி இருப்பதாக நான் இதுவரை கேள்விப் பட்டது இல்லை. தங்களுக்கு இந்தச் செய்தியைச் சொன்னவர் யார்?' என்று ஆசிரியப் பிரான் கேட்டார்.

அப்போது புதுச்சேரிக் கனவான் அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். கடலூரிலிருந்து வாரந்தோறும் ஒரு தமிழ் வித்துவான் புதுச்சேரிக்கு வந்து பல புதிய விஷயங்களைப் பற்றிப் பேசுவார். ஒரு தடவை அவரே சில பாடல்களைச் சொல்லி, அவை வரந்தருவார் பாரதத்தில் இருப்பதாகச் சொன்னர். அந்தப் பாடல்களுக்கு அர்த்தமும் சொன்னர்' என்ருர்,

ஆசிரியப் பெருமான், அப்படியா ? மிகவும் மகிழ்ச்சி. அவர் சொன்ன பாடல்களில் ஏதாவது ஒன்று உங்களுக்கு ஞாபகம் இருந்தால் சொல்லுங்கள்' என்று கேட்டார்.

ஞானப்பிரகாச முதலியார், ஒரு பாடலைச் சொன்னர். இதை நான் கவனிக்கிறேன்” என்பதற்கு மேல் ஆசிரியர் அப்போது வேறு ஒன்றும் சொல்லவில்லை. அவர் போன பிறகு ஆசிரியர் சொன்னர்: 'புறநானூற்றில் உள்ள பாடலைச் சொல்வி அந்த வித்துவான் இவரை ஏமாற்றி இருக்கிருர், நான் அப்போதே சொல்லி யிருப்பேன். கடலூர்ப் புலவரிடம் ஞானப்பிரகாச முதலியார் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிருர், நான் அதனை அப்போதே சொல்லியிருந்தால், அவருக்கு என்மேல் கோபமும், வருத்தமும் வந்திருக்கக்கூடும். அவர் மகிழ்ச்சியைக் குறைப்பானேன் என்று இருந்தேன். யார் வேண்டுமானலும், எதை வேண்டுமானலும் சொல்லிவிடுகிருர்கள். யாரும் எதையும் நம்பிவிடுகிருர்கள். யாரும் கேட்டிராத பாடல் ஒன்றை மிகத் தடபுடலாகச் சொல்லி, இது வரந்தருவார் பாரதத்தில் உள்ளது என்ருல் அதை யார் ஆராயப் போகிருர்கள் ? இப்படித்தான் எத்தனையோ பேர்கள் பொய்யும், புரட்டும் சொல்லி ஊரை ஏமாற்றுகிரு.ர்கள்' என்று மிகவும் வருத்தத்தோடு, தம் வேதனையை வெளிப்படுத்திக் கொண்டார்.

சி. வை. தாமோதரம் பிள்ளை யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து வாழ்ந்த சி. வை. தாமோதரம் பிள்ளே அந்தக் காலத்தில் பல தமிழ் நூல்

3604–2 -