பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 என் ஆசிரியப்பிரான்

களைப் பதிப்பித்துக் கொண்டிருந்தார். தொல்காப்பியம், இலக்கண விளக்கம், இறையனரகப் பொருள், சூளாமணி ஆகிய நூல்கள் அவருடைய பதிப்புக்களாக வெளிவந்தன. ஆனலும் அவருடைய பதிப்புக்கள் சிறப்பானவை என்று சொல்ல முடியாது. ஆசிரியப் பெருமானுடைய பதிப்புக்களுக்கும், அந்தப் பதிப்புக்களுக்கும் அஜகஜாந்தரம் அவர் வேருேர் இடத்தில் வேலை பார்த்துக் கொண்டே இவற்றையும் கவனிக்க வேண்டி இருந்தது. பதிப்பிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் சில பண்டிதர்களின் உதவியைக் கொண்டு அவர் பதிப்பித்தார்.

தாம் பதிப்பிக்கும்போது அந்த நூல்களைப் பற்றிய செய்தியை ஆசிரியப்பெருமானுக்கு எழுதித் தெரிவிப்பார். தமக்கு ஏடுகள் வேண்டுமென்று எழுதுவார். அப்படியே ஆசிரியரும் அனுப்பி வந்தார். யுத்தகாண்டம் பதிப்பிக்க வேண்டுமென்று ஒரு முறை எழுதியிருந்தார்.

பொன்னுசாமிப்பிள்ளை என்பவர் ஆசிரியரிடம் படித்தவர். மகாபாரதப் பிரசங்கம் மிகச் சிறப்பாகச் செய்வார். அவரோடு தொடர்பு கொண்டு தாமோதரம் பிள்ளை தம் நூல் ஆராய்ச்சியை நடத்தி வந்தார். அதனால் தாமோதரம் பிள்ளைக்குப் பல விளக்கங்கள் கிடைத்தன. பொன்னுசாமிப்பிள்ளைக்கும் தக்க பொருள் உதவி கிடைத்து வந்தது. இவற்றை எல்லாம் எண்ணி ஆசிரியப் பெருமான் அவ்வப்போது தாமோதரம் பிள்ளைக்குத் தம்முடைய ஏடுகளைக் கொடுத்து வந்தார். ஏடுகளைப் பார்த்து ஆராய்ந்து பதிப்பிக்கும் முறையில் எவ்வளவு அல்லல் உண்டு என்பதைத் தாமோதரம்பிள்ளை தம்முடைய நூல்களின் முகவுரையில் எழுதியிருக்கிருர். அப்படி எழுதிய முகவுரை ஒன்றில் ஆசிரியப் பெருமானே மிகவும் பாராட்டியிருக்கிரு.ர்.

பதிப்பாசிரியர்களின் வேண்டுகோள்

அந்தக் காலத்தில் நூல்களைப் பதிப்பிக்கும் புலவர்கள் சிலர் இருந்தார்கள். பதிப்பாசிரியர்களுக்குள் சிறந்த மாணிக்க மாகத் திகழ்ந்த ஆசிரியப் பெருமானிடம் அவர்கள் பல யோசனைகளைக் கேட்பார்கள். தங்களுடைய பதிப்பைப் பார்த்துத் திருத்தித்தர வேண்டும் என்று எழுதுவார்கள். ஆளுல் தாம் ஆராய்ந்து வருகின்ற நூல்களில் ஈடுபட்டு வேலை செய் வதற்கே போதுமான நேரம் கிடைக்காததனால், அத்தகைய வேலைகளை ஏற்றுக்கொள்வதற்கு நேரம் இருப்பதில்லை. என்ருலும் தம்மால் இயன்றவரை பல யோசனைகளை எழுதுவார்; ஏட்டுப் பிரதிகளை உதவுவார். - - - - . -