பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பழைய மரபு

- அந்தக் காலத்தில் பாண்டிய நாட்டில் கோவில்களில் நாடார்கள் புகுவது இல்லை. எத்தனையோ நாடார்கள் நல்ல பழக்கங்களை உடையவர்களாகவும், சிவ பக்தியில் சிறந்தவர் களாகவும் இருந்தார்கள். என்ருலும் நாடார் என்ற சாதியை எண்ணி, அவர்களைக் கோவிலுக்குள் விடுகிற பழக்கம் இல்லாமல் இருந்தது.

இராமநாதபுரம் ஜமீனைச் சேர்ந்த கிராமம் கமுதி. அங்கே மீளுட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இருக்கிறது. நாடார்கள் அந்தக் கோவிலுக்குள் புகுந்தார்கள். மற்றவர்கள் அதைத் தடுத்தார்கள். இதளுல் ஒரு கலகமே உண்டாயிற்று.

தம்முடைய ஜமீனைச் சேர்ந்த கிராமம் ஆகையால், பழைய மரபை மாற்றக் கூடாது என்ற எண்ணத்தைக் கொண்ட அரசர், அவ்வாறு கோவிலுக்குள் புகுந்த நாடார்கள் மீது ஒரு வழக்குப் போட்டார். பல காலமாக இருந்து வந்த பழக்கத்தை மாற்று வதனால் தமக்குப் பழி வரலாம் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய் தார். அவருக்கே பல நாடார்கள் நண்பர்களாய் இருந்தார்கள். என்ருலும் நட்பை உத்தேசித்து மரபை மாற்றக் கூடாது என்ற உறுதியான எண்ணம் உடையவராக இருந்ததால் அந்த வழக்கைப் போட்டார்.

மதுரைச் சப் கோர்ட்டில் விசாரணை நடந்தது. டி. வரதராவ் என்பவர் அப்போது சப்ஜட்ஜாக அங்கே இருந்தார். ஆசிரியப் பெருமானை அங்கே வந்து சாட்சி சொல்ல வேண்டுமென்று சொன்னர்கள். மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களே, நீங்கள் வந்து சாட்சி சொன்னுல் எனக்கு மிகவும் பலமாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார். ஆசிரியப் பெருமான் அப்படியே போய்ச் சாட்சி சொன்னர், நாடார்களைப்பற்றி இழிவாகக் கூருமல் அவர்களில் எத்தனையோ பக்தர்கள் இருக்கிரு.ர்கள் என்று சொல்லி, ஆளுலும் மரபு பிறழக்கூடாது என்று வற்புறுத்தினர். அதன் பிறகு சப் ஜட்ஜ் திர்ப்புக் கூறினர். அந்தத் தீர்ப்பில் ஆசிரியரைப் பற்றிச் சிறப்பாக அந்த நீதிபதி சொல்லியிருந்தார்,