பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 என் ஆசிரியப்பிரான்

இந்தச் சாட்சியை அளித்தவர் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருக்கிறவர். தமிழில் உள்ள பழைய நூல்கள் பலவற்றை ஆராய்ந்து பதிப்பித்துக் கொண்டிருக்கிறவர். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி ஆகியவற்றைப் பதிப்பித்திருக் கிருர். அந்நூல்களுக்கு உரையும் எழுதியிருக்கிருர். டாக்டர் போப் துரை முதலியவர்கள் அவருடைய புலமைத் திறத்தையும், அவரது பெருமையையும் சிறப்பாக எழுதியிருக்கிரு.ர்கள். அவருடைய சாட்சி இந்த வழக்குக்கு மிகவும் தகுதியானதாய் இருக் கிறது. அவர் நடு நிலைமை பிறழாமல் உண்மையை உணர்ந்து சொல்கிரு.ர். ஆகையால் அவருடைய சாட்சி மிகவும் கவனத்திற். குரியதாய் இருந்தது. இத்தகைய சிக்கலான விஷயங்களில் அத்தகைய பெரியவர் சாட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது' என்று விரிவாக எழுதினர்.

பழைய மேசை

9అ சமயம் கும்பகோணம் காலேஜில் மேசை, நாற்காலி போன்ற சில மரச்சாமான்களை ஏலம் போட்டார்கள். தியாகராச செட்டியார் பயன்படுத்திய மேசையும் அவற்றில் இருந்தது.

தமக்கு வேலை பண்ணிவைத்த தியாகராச செட்டியாரிடம் பெரிதும், நன்றியறிவுடையவர் ஆசிரியர். அவரை நினைவு கூரத் தம்முடைய வீட்டுக்குத் தியாகராச விலாசம் என்று பெயர் வைத். தார்; அவருடைய வரலாற்றையும் எழுதியிருக்கிரு.ர். ஆகவே தியாகராச செட்டியார் பல காலம் இருந்து பாடம் சொல்லும் போது, அவரது கைபட்ட அந்த மேசை ஆசிரியருக்குப் புனிதமான பண்டமாகத் தோன்றியது. அந்த மேசையும் ஏலத்திற்கு வருகிறது என்று தெரிந்தவுடன், அதை ஏலம் எடுத்துத் தம் வீட்டிற்குக் கொண்டுவந்துவிடலாம் என்று ஆசிரியர் போனர். ஆனல் ஏலம் கேட்கப் போன போதுதான், முதல் நாளே அந்த மேசையை வேறு ஒருவர் வாங்கிக்கொண்டு போய்விட்டார் என்ற செய்தி ஆசிரியருக்குக் கிடைத்தது. அதனல் ஆசிரியர் மிகவும். ஏமாற்றம் அடைந்தார்.

அது எங்கே போயிருக்கும்? யார் அதை வாங்கிக் கொண்டு போளுர்?' என்பனவற்றை எல்லாம் விசாரித்தார். பிறகு யானையடி குதிரையடித் தெருவிலுள்ள இராமசாமிநாயுடு என்பவர் அதை வாங்கிக் கொண்டு போய் இருப்பதாகத் தெரிந்தது. அதை வாங்கினவர் விலாசம் தெரிந்தவுடன், கொஞ்சம் பணம் அதிகமாகக் கொடுத்து அவரிடமிருந்து மேசையைத் தாம் வாங்கிவந்து விடலாம். என்ற தீர்மானத்தில், இராமசாமி நாயுடுவைத் தேடிச் சென்ருர்.